சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் பணி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு பில்டர் காபியுடன் மசால் தோசை கொடுக்கப்பட்டது என விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளித்தது என விஞ்சானி வெங்கடேஷ்வர சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலவு பயணமான சந்திரயான்-3 இன் வெற்றிக்கு மத்தியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) இருந்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்திரயான் 3 தரையிறக்க முயற்சியில் பணியாற்றிய குழுவினருக்கு இஸ்ரோ தினமும் மாலை 5 மணிக்கு மசால் தோசை மற்றும் பில்டர் காபி வழங்கியது எனக் கூறப்படுகிறது. இதனால்,
"மணிக்கணக்கில் கூடுதல் வேலை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தினமும் மாலை 5 மணிக்கு மசால் தோசை மற்றும் பில்டர் காபியை வழங்கப்பட்டது. இது அவர்கள் மனச்சோர்வைப் போக்கி புதிய உந்துதல் அளித்தது" என விஞ்ஞானி வெங்கடேஷ்வர சர்மா கூறியிருக்கிறார். "அனைவரும் நீண்ட நேரம் இருந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைந்தனர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரபரப்பாக வேலை செய்யும் பிரக்யான் ரோவர்! இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 ஆய்வுப் பணிகள்!
இந்தியாவின் நிலவுப் பயணத்திற்கு ரூ.615 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. இது 2020ல் தோராயமாக 75 மில்லியன் டாலுரக்குச் சமம். 165 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட ஹாலிவுட்டின் விண்வெளி தொடர்பான படமான இன்டர்ஸ்டெல்லர் படத்துக்கு ஆன செலவைவிட குறைவாகவே செலவாகியுள்ளது என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய வரலாற்று தருணத்தில், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும், நிலவில் வெற்றிகரமாக மென்மையான தரையிறக்கம் செய்த நான்காவது நாடாகவும் பெருமை அடைந்துள்ளது.
மென்மையான தரையிறங்கும் முயற்சியின் இக்கட்டான கடைசி 17 நிமிடங்களை உலகமே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. லேண்டர் துல்லியமாக செயல்பட்டு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பின்னர் 25ஆம் தேதி பிரக்யான் ரோவரும் நிலவில் இறங்கி ஆராய்ச்சியைத் தொடங்கியது.
அதன் பணிகளை விடாமுயற்சியுடன் செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் பயணத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பாதையில் உள்ள தடங்கல்களைத் தவிர்த்து சாமர்த்தியமாக வலம்வந்துகொண்டிருக்கிறது. நிலவில் சல்பர், இரும்பு, ஆக்ஸிஜன் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. பிளாஸ்மா இருப்பதையும் கண்டறிந்துள்ளது.
2047 வரை இந்தியாவுக்கு ஏராளமான நல்வாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஜி20 உச்சிமாநாடு!