இதுவரை யாரும் கண்டிராத நிலவின் தென் பகுதியில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியது முதல் இப்பொது சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 வரை அனைத்தையும் மிகச்சரியாக இயக்கி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது என்றே கூறலாம்.
இந்த வெற்றிகளுக்குப் பின்னால், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை முன்னேற்றுவதற்கு உழைக்கும் ஆர்வமுள்ள மற்றும் உறுதியான விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த விஞ்ஞானிகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?
ISRO விஞ்ஞானி அல்லது அங்கு பொறியாளராக பணியாற்றுபவர்கள் சம்பளம்தோராயமாக ரூ. 84,360 ரூபாயாம். மேலும் கூடுதல் சலுகைகள் மற்றும் போனஸ்கள் என 7வது ஊதியக் குழுவின் படி அவர்கள் இந்த சம்பளத்தை பெறுகின்றனர். சரி இனி மொத்த ஊதியம் போன்றவை உட்பட ISRO விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பெரும் சம்பளக் கட்டமைப்பின் விரிவான விளக்கத்தை காணலாம்.
ISRO விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளரின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்டது தான் அவர்களின் ஊதிய நிலை. ஆகவே இஸ்ரோவில் அவர்களின் தனித்துவமான பங்கு மற்றும் பொறுப்புகளைப் பொறுத்து அது மாறுபடலாம். 7வது ஊதியக் குழு அறிவிப்பின்படி ரூ. 56,100 அடிப்படைச் சம்பளம் பெறுகின்றனர் ஊழியர்கள்.
ஒரு ISRO விஞ்ஞானி பொறியாளரின் (SC) ஆரம்ப ஊதியம் ரூ. 84, 360. இது பயணச் சலுகைகள், வீட்டு வாடகைப் பலன்கள் (HRA), மற்றும் அகவிலைப்படி பலன்கள் போன்ற பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. எனவே, இஸ்ரோ விஞ்ஞானிக்கான மொத்த ஊதியம் ரூ.84,000. பிடித்தம் செய்த பிறகு நிகர சம்பளம் ரூ.72,360 ஆகும்.
மொத்தத்தில் ஒரு இஸ்ரோ விஞ்ஞானி சுமார் 70,000 வரை தனது அடிப்படை சம்பளமாக பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ இணையதளமான isro.gov.inல், விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பதவிக்கு 65 காலியிடங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. ஆகவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பரபரப்பாக வேலை செய்யும் பிரக்யான் ரோவர்! இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 ஆய்வுப் பணிகள்!