இந்திய தலைநகர் டெல்லியின் நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில், 85 வயது மூதாட்டி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் புகாரளித்த நிலையில் ஆகாஷ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த மூதாட்டி தனது வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகாஷ் என்ற 28 வயது நபர் தான் இந்த படுபாதக செயலை செய்தார் என்று தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், அதிகாலை அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த அந்த மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் அந்த மூதாட்டியை தாக்கியதாகவும், பிறகு பிளேடால் அந்த மூதாட்டியின் உதடுகளை வெட்டியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை! இவர் யார் தெரியுமா? மகனின் துப்பாக்கி சிக்கியது!
மேலும் தற்போது சிகிச்சை பெற்று வரும் அந்த மூதாட்டிக்கு அவருடைய பிறப்புறுப்பு மற்றும் முகத்தில் பயங்கரமாக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளியான ஒரு நோட்டீஸில், DCW தலைவர், டெல்லி காவல்துறையிடம், வழக்கு தொடர்பான மற்ற விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலை தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றது, அந்த மூதாட்டியின் உடல் நலம் தற்போது எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
காலில் வீழ்ந்து கெஞ்சியும் விடாத கணவர்.. மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலம்.. என்ன காரணம் தெரியுமா?