வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோள் - இஸ்ரோவின் மற்றொரு சாதனை

 
Published : Dec 07, 2016, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோள் - இஸ்ரோவின் மற்றொரு சாதனை

சுருக்கம்

பூமியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–36 ராக்கெடை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–36 ராக்கெட் சரியா 10 மணி 24 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 817 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

கடந்த 2003ஆம் ஆண்டில் ரிசோர்ஸ் சாட்-1 மற்றும் 2011ஆம் ஆண்டில் ரிசோர்ஸ் சாட்-2 உள்ளிட்ட செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!