கேலோ இந்தியா போட்டி: களரியில் 2 பதக்கங்கள் வென்ற சமஸ்கிரிதி மாணவர்கள்!

By karthikeyan VFirst Published Jun 27, 2022, 2:31 PM IST
Highlights

தேசிய அளவில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 2 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.
 

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை கண்டறியவும் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இதையும் படிங்க - மண் காப்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக 21 நாடுகளுக்கு பயணம்..! சத்குரு அறிவிப்பு

அதன்படி, 2021-ம் ஆண்டிற்கான போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்சகுலாவில்  இம்மாதம் நடத்தப்பட்டன. 25 வகையான விளையாட்டு போட்டிகளில் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 180 இளம் வீரர்கள் பங்கேற்றனர். 

இதையும் படிங்க - ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 23-வது ஆண்டு தினம்..! பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு

இதில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் திரு.இன்ப தமிழன் சுவடுகள் பிரிவிலும், திரு.பத்மேஸ்ராஜ் மெய்பயட்டு பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவையில் செயல்படும் ஈஷா சமஸ்கிரிதி பள்ளியில் களரிப் பயட்டு மட்டுமின்றி, யோகா, பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற பாரம்பரிய கலைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் பல ஆண்டுகள் கடும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் ‘ப்ராஜக்ட் சம்ஸ்கிரிதி’ என்ற பெயரில் இக்கலைகளை உலகம் முழுவதும் பயிற்றுவித்து வருகின்றனர்.
 

click me!