அக்னிபத் திட்டம்.. விமானப்படையில் சேருவதற்கு 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்..

By Thanalakshmi VFirst Published Jun 27, 2022, 12:29 PM IST
Highlights

அக்னிபாத் வேலையில் சேருவதற்காக இதுவரை 56,960 விண்ணபங்கள் பெறப்பட்டு இருப்பதாக இந்திய விமானப்படை பதிவிட்டுள்ளது. இந்த வாய்ப்பு ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 

4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் வகையில் அக்னிபத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. வட மாநிலங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு பகுதியில் ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது சொத்து போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து தென் மாநிலங்களில் அக்னிபத் எதிராக போராட்டம் பரவியது. குறிப்பாக தெலுங்கானாவில் ரயில்நிலையத்தில் நடத்த போராட்டத்தை கட்டுபடுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.

மேலும் படிக்க:பரபரப்பு !! பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. எல்.கே.ஜி மாணவன் உடல் நசுங்கி பலி..

இதனை தொடர்ந்து, போராட்டம் பல்வேறு நிலையில் தீவிரமடைந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் இரண்டு முறை தனது இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  பின்னர் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான உச்ச வயது வரம்பிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவில் அக்னி வீரர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் உள்ள வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க:அக்னிபத் திட்டம், திறமையான மனித வளத்தை உருவாக்கும் முயற்சி - Naukri நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கருத்து

இருப்பினும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. நாடுமுழுவதும் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்னிபாத் வேலையில் சேருவதற்காக இதுவரை 56960 விண்ணபங்கள் பெறப்பட்டு இருப்பதாக இந்திய விமானப்படை பதிவிட்டுள்ளது. இந்த வாய்ப்பு ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. pic.twitter.com/GdVAmu7wA3

— Asianetnews Tamil (@AsianetNewsTM)
இதற்கான தேர்வு ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள்.

மேலும் படிக்க:அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை - எப்போது தொடங்கும் ? அன்புமணி ராமதாஸ் கேள்வி

மேலும் இந்த முறை உச்ச வயது வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்தற்கான வாய்ப்பு ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!