சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

By Dhanalakshmi GFirst Published Jun 27, 2022, 10:08 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் அளித்து இருக்கும் நிலையில், இதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தாக்கல் செய்யப்பட மனுக்கள் இன்று  காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீஸ் அளித்து இருக்கும் நிலையில், இதை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தாக்கல் செய்யப்பட மனுக்கள் இன்று  காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

இரண்டு மனுக்களில், தகுதி நீக்கம் தொடர்பான நோட்டீசை ரத்து செய்ய வேண்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், மற்றொன்று சட்டசபை தலைவராக அஜய் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதிகள் சூர்யா காந்த், ஜே.பி. பர்திவாலா இன்று விசாரிக்கின்றனர்.


மாகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவ சேனா முதல்வர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க் கொடி தூக்கினர். இவர்கள் திடீரென குஜராத் மாநிலத்தில் தலைமறைவாகினர். பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு மாறினர். தன்னிடம் சிவ சேனா எம்.எல்.ஏக்கள் 40 பேர் இருப்பதாகவும், மேலும் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும், ஏக்நாத் ஷிண்டே கூறி இருந்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முக்கிய கோரிக்கையே, மகா விகாஷ் அகாதி கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேற வேண்டும் என்பதுதான். அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது அரசியலமைப்புச் சட்டம் பத்தாவது பிரிவுக்கு எதிரானது என்று அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கறிஞர் அபிநய் சர்மா தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்து மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 

click me!