இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி...! மோடி மீது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை- ஜே.பி.நட்டா மகிழ்ச்சி

By Ajmal KhanFirst Published Jun 27, 2022, 9:35 AM IST
Highlights

பிரதமர் மோடி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தில் பாஜக வெற்றி

நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது.  இதே போல பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஷிரோமனி அகாலிதளம் வேட்பாளர் சிம்ரன்ஜித் சில் மான் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 வது இடத்தை பிடித்துள்ளது. உத்தரப்பிதேசத்தில் அசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

அதிகரித்தது பாஜகவின் பலம்..!இடைத்தேர்தலில் 2 மக்களவை மற்றும் 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி

40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேராக போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பப்படும்… சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து!!

மோடி மீதான அசைக்க முடியாத நம்பிக்கை

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதால் பாஜக தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் பட்டுள்ளதால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக கூறினார். நாடு முழுவதும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தது  பிரதமர் மோடி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதை காட்டுகிறது என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி… பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!!

 

click me!