மகாராஷ்டிராவில் சிவ சேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது!!

By Dhanalakshmi GFirst Published Jun 27, 2022, 1:22 PM IST
Highlights

Maharashtra Political Crisis: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் சிவ சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.

மகாராஷ்டிராவில் சிவ சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவ சேனாவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வந்தன. மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தனர். சிவ சேனா கட்சியில் மொத்தம் 55 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி வகுத்துள்ளனர். இவர்கள் கடந்த வாரம் திடீரென குஜராத் மாநிலத்தில் தலைமறைவாகினர். பின்னர் அங்கிருந்து அசாம் மாநிலம், கவுகாத்தி சென்று தங்கினர்.

சிவ சேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு; உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை     

அங்கிருந்தவாறு சிவ சேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு சாவல் விடுத்து வந்தனர். தன் பக்கம் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாகக் கூறி வந்தார் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தலைமை தாங்கி வரும் ஏக்நாத் ஷிண்டே. இந்த நிலையில் 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இன்று காலை விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கு மதியம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே சிவ சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்.

40 எம்எல்ஏக்களின் உடல்கள் நேராக போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பப்படும்… சஞ்சய் ராவத் பரபரப்பு கருத்து!!

முன்னதாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவராஜ் தாக்கரேவுடன் தொலைபேசியில் ஏக்நாத் ஷிண்டே இன்று பேசி அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

தொடர்ச்சியாக மகாராஷ்டிரா ஆளுநரை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஏக்நாத் ஷிண்டே உட்பட 8 அமைச்சர்களின் இலாகாக்களை சிவ சேனா பறித்துள்ளது. 

click me!