மோடி அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறதா? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?

By Ramya s  |  First Published May 15, 2023, 12:53 PM IST

அனைத்து இந்திய பயனர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு ரூ. 239 இலவச ரீசார்ஜ் வழங்குவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.


சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அனைத்து இந்திய பயனர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி 28 நாட்களுக்கு 239 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்குவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசு இலவச ரீசார்ஜ் வழங்குவதாகவும், அதனால் பாஜகவுக்கு அதிக மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் இந்த சலுகையை பெறலாம் என்றும், சலுகையைப் பெற தங்கள் பெயரைச் சேர்க்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போச்சு! முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.. இபிஎஸ்..!

Tap to resize

Latest Videos

எனினும் இந்திய பத்திரிக்கை தகவல் பணியகமான PIB இந்த செய்தியை போலி செய்தி என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த இலவச ரீசார்ஜ் திட்டம் இந்திய அரசால் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இந்த செய்தி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

दावा : प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा सभी भारतीय यूजर्स को ₹239 का 28 दिन वाला रिचार्ज फ्री में दिया जा रहा है

◼️ यह दावा फर्जी है
◼️ भारत सरकार द्वारा यह फ्री रिचार्ज योजना नहीं चलाई जा रही
◼️ यह धोखाधड़ी का एक प्रयास है pic.twitter.com/aGk9u4LJEU

— PIB Fact Check (@PIBFactCheck)

 

இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற இணையதள முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும். அதே போல் நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். https://pib.gov.in என்ற இணையதளத்திலும் உண்மை சரிபார்ப்பு தகவலை சரிபார்க்க முடியும்.

இதையும் படிங்க : மகனின் உடலை 200 கி.மீ பையில் வைத்து எடுத்து சென்ற நபர்.. ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த முடியாததால் நடந்த அவலம்

click me!