பயணிகளை மோசமாக நடத்திய இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.50 கோடி அபராதம்!

இண்டிகோ ரூ.1.50 கோடியும் மும்பை விமான நிலையம் ரூ.90 லட்சமும் அபராதம் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளன.


தாமதமான விமானத்திற்காகக் காத்திருந்த பயணிகள் விமான ஓடுதளத்திலேயே அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை விமான நிலையத்துக்கும் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இண்டிகோ மீது விதிக்கப்பட்ட அபராதம் சமீப காலங்களில் ஒரு விமான நிறுவனம் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பிரிவு (BCAS) ஆகியவை இந்த அபராதத்தை விதித்துள்ளன. விமான போக்குவரத்து இயக்குநரகம் இரு நிறுவனங்களையும் ரூ.30 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம்!

விமானப் பாதுகாப்புப் பிரிவு இண்டிகோவுக்கு ரூ.1.2 கோடியும், மும்பை விமான நிலையத்துக்கு ரூ.60 லட்சமும் அபராதம் விதித்துள்ளது. இதனால் இண்டிகோ ரூ.1.50 கோடியும் மும்பை விமான நிலையம் ரூ.90 லட்சமும் அபராதம் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளன.

பயணிகள் பயணிகள் அதிக நேரம் விமான ஓடுதளப் பகுதியில் இருப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அதன் மூலம் பயணிகளுக்கு மட்டுமின்றி விமானத்துக்கும் ஆபத்தில் நேரக்கூடும் என்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.

கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோவின் 6E 2195 விமானம் குறித்த நேரத்தில் புறப்படாததை சூழலில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிடும் காங்கிரஸ்! இந்தியா கூட்டணியில் புது சர்ச்சை?

click me!