"ஒட்டுமொத்த நாடும் ராமர் மயமாகிவிட்டது. ராமரின் அவதார நோக்கம், அவரது உத்வேகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை பக்திக்கு அப்பாற்பட்டவை. ராமர் நல்லாட்சியின் அடையாளம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தற்போது இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த வார இறுதியில் அயோத்தியில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவிற்கு செல்ல இருக்ககிறார்.
வரும் 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளுக்காக ஒட்டுமொத்த தேசமும் ஆவலுடன் காத்திருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். முன்னதாக 11 நாள் விரதம் இருக்கும் அவர், தற்போது கேரளாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் விழாவுக்கு ஒரு நாள் முன்னதாகவே பிரதமர் மோடி அயோத்தி சென்றடைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதமாகக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடிக்கான பயணத் திட்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லபடுகிறது.
பொங்கல் பரிசாக பைக் கொடுத்து அசத்திய ஜவுளிக்கடை உரிமையாளர்! ஊழியர்கள் உற்சாகம்!
பிரதமர் மோடி, இந்த வார இறுதியில் அயோத்தியில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவிற்குச் செல்கிறார். ராம் லல்லாவின் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16ஆம் தேதியே தொடங்கிவிட்டன. விழாவின் முக்கிய நிகழ்வு மதியம் 12:15 முதல் 12:45 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
"ஒட்டுமொத்த நாடும் ராமர் மயமாகிவிட்டது. ராமரின் அவதார நோக்கம், அவரது உத்வேகம் மற்றும் நம்பிக்கை ஆகியவை பக்திக்கு அப்பாற்பட்டவை. ராமர் நல்லாட்சியின் அடையாளம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திறப்பு விழாவுக்கு மறுதினமான ஜனவரி 23ஆம் தேதி முதல் ராமர் கோவில் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிடும் காங்கிரஸ்! இந்தியா கூட்டணியில் புது சர்ச்சை?