அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிடும் காங்கிரஸ்! இந்தியா கூட்டணியில் புது சர்ச்சை?

By SG Balan  |  First Published Jan 17, 2024, 6:50 PM IST

சண்டிகரில் இந்தியா கூட்டணிச் சேர்ந்த இரண்டு கட்சிகள் முதல் முறையாக ஒன்றாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவை தேர்தலில் வெற்றி பெற விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரையும் காங்கிரஸ் கட்சி "ஹிட்லர்" என்று விமர்சித்துள்ளது. இதன் மூலம் பஞ்சாப்பில் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஜெர்மனி நாட்டு சர்வாதிகாரியான ஹிட்லரின் புகைப்படத்துடன் ஆம் ஆத்மி தலைவர்களின் தோற்றம் ஒத்துப்போவதாகக் கூறியிருக்கிறது.

காங்கிரஸின் பிரதாப் சிங் பஜ்வா, ஆம் ஆத்மியின் சர்வாதிகார ஆட்சி அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சியைப் போல இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். "பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் படங்களை அவர்களின் அலுவலகங்களில் இருந்து கீழே இறக்கி, அதற்கு பதிலாக அடால்ஃப் ஹிட்லரை வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூற விரும்புகிறேன். ஹிட்லரின் படத்தை நீங்கள் கவனமாகப் பார்த்தால், அது அவர்களுடன் பொருந்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி தங்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று அக்கட்சியில் உள்ள பலர் கவலை தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் மிக மோசமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை

மேயர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இரு கட்சிகளின் தலைமையும் சமுகமான புரிந்துணர்வுக்கு வந்துள்ளன. இதனால், மேயர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஜஸ்பிர் சிங் பண்டி தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய நிலையில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ஆம் ஆத்மிக்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ளதாத் தெரிகிறது.

இன்று காலை, சண்டிகரில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்குச் சென்ற ஜஸ்பிர் சிங் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அவர் அங்கு சென்றிருந்தபோது பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது.

மேயர் தேர்தல் கூட்டணி:

ஆம் ஆத்மியின் ராகவ் சதாவும் காங்கிரஸ் கட்சியின் பவன் பன்சாலும் சண்டிகரில் சந்தித்தபோது இரு கட்சிகளும் ஒற்றுமையை வெளிப்படுத்தின. சந்திப்பின் புகைப்படம், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதில் இருவரும் ஒரு புல்வெளியில் ஒன்றாகப் பேசிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், எந்த இடம் என்று தெரிவிக்கப்படவில்லை.

சண்டிகரில் இந்தியா கூட்டணிச் சேர்ந்த இரண்டு கட்சிகள் முதல் முறையாக ஒன்றாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவை தேர்தலில் வெற்றி பெற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பவன் பன்சால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

"மேயர் தேர்தலில் நாங்கள் ஒன்றாக இணைந்து மூன்று பதவிகளையும் வெல்வோம். இதன் மூலம் நாட்டில் பாஜகவின் ஜனநாயக விரோத ஆட்சியின் முடிவு அறிவிக்கப்படும்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்தி பதிவில் ராகவ் சதாவும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கு போட்டியிடுகிறது. மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

உலகின் சக்திவாய்ந்த கரன்சி எது? டாலருக்கே இந்த நிலைமையா? அப்ப இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி?

click me!