விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது !! எந்த நாடு தெரியுமா?

By Raghupati R  |  First Published Dec 25, 2022, 7:36 PM IST

விசா இல்லாமல் இந்தியர்கள் இனி இந்த நாட்டிற்கு செல்ல முடியாது. இது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியர்கள் இனி இந்த  நாட்டிற்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை நிறுத்த செர்பியா அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 1, 2023 முதல், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி விசா இல்லாமல் செர்பியாவிற்குள் நுழைய முடியாது. ஐரோப்பிய ஒன்றிய விசாக் கொள்கையின் அடிப்படையில், மத்திய ஐரோப்பிய நாடு சமீபத்திய முடிவை எடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

செர்பியாவில் 30 நாட்கள் வரை தங்குவதற்கு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இதற்கு முன்பு அனுமதி இருந்தது. இனி செர்பியாவிற்குள் இந்தியர்கள் இனி விசா இல்லாமல் நுழைய முடியாது என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய முடிந்தது.

இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

இந்தியர்கள் ஒரு வருடத்தில் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் வாழலாம். ஆனால் இந்த புத்தாண்டில் இந்த வசதி வாபஸ் பெறப்படும் என்பதால் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.செர்பிய தலைநகர் பெல்கிரேடில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நாட்டிற்குச் செல்வதற்கு முன் பெல்கிரேடில் உள்ள செர்பிய தூதரகத்தில் விசா பெறுமாறு தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது செல்லுபடியாகும் யுகே, யுஎஸ் அல்லது ஷெங்கன் விசாவை வைத்திருக்கும் இந்தியர்கள் 90 நாட்களுக்கு விசா இல்லாமல் செர்பியாவிற்குள் நுழைய முடியும்.

இந்தியர்களைத் தவிர, கினியா-பிசாவ், துனிசியா மற்றும் புருண்டி குடிமக்களுக்கு விசா இல்லாத பயண வசதியை செர்பியா நிறுத்தியுள்ளது. இந்த நாடுகளுக்கு, நவம்பர் 20 முதல் இந்த வசதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!

click me!