
தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை பெற்று வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், செல்போன் பயன்படுத்துவது, மது அருந்துவது, மற்றவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது போன்றவற்றையெல்லாம் சக பயணிகள் அனுசரித்து செல்ல வேண்டி நிலை இருந்து வருகின்றது. இந்த நிலையில், இரவு நேரங்களில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, அந்தந்த இருக்கைகளில் உள்ள பயணிகள் யாரும் அதிக ஒலியில் பாடல்கள் ஏதும் கேட்க கூடாது. இயர்போன் கொண்டு வேண்டுமென்றால் பாடல்கள் கேட்டுக் கொள்ளலாம்.
புழக்கத்தில் உள்ளதா ரூ.500 கள்ள நோட்டு? இணையத்தில் வைரலாகும் வீடியோ... ரிசர்வ் வங்கி விளக்கம்!!
அதிக சத்தமாக போனில் பேசக் கூடாது. இரவு விளக்கு தவிர, 10 மணிக்கு மேல் எந்தப் பயணிகளும் விளக்குகளை எரிய வைக்க அனுமதி அனுமதிக்கப்படமாட்டார்கள். இரவு 10 மணிக்கு பிறகு ரயில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் பரிசோதனை செய்யக் கூடாது.நடு பெர்த்தில் உள்ள பயணிகளுக்கான இருக்கையை திறந்தால், கீழ் இருக்கையில் உள்ள பயணிகள் அதனை எதிர்க்க முடியாது.
BREAKING: நாட்டையே உலுக்கிய கோவை, மங்களூர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு!!
ரயிலில் மது அருந்துவது, புகைபிடிப்பது, தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கவும், பொது ஆச்சாரத்தை கடைபிடிக்கவும் ரயில் டிக்கெட் பரிசோதகர், கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரயிலில் கூட இ - கேட்டரிங் சேவைகளைப் பயன்படுத்தி பயணிகள் தங்களது உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விதிகள் ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளுக்கு அமைதியான இரவை உறுதி செய்யும். இந்த புதிய விதிமுறைகளை மீறும் எந்தவொரு பயணியும் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இந்திய ரயில்வேயில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.