ராகுல்காந்தி கல்யாணம் பண்ணிக்காம இருக்க இதான் காரணம்... கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!

Published : Mar 06, 2023, 09:41 PM IST
ராகுல்காந்தி கல்யாணம் பண்ணிக்காம இருக்க இதான் காரணம்... கர்நாடக பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து!!

சுருக்கம்

ராகுல்காந்தி குறித்த கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல்காந்தி குறித்த கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ராகுல் காந்தி மற்றும் சித்தராமையா இருவரும் மேற்கொண்ட அரசியல் விளையாட்டை பார்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுகொண்டால் ஆண்மை குறைவு ஏற்பட்டு குழந்தை பிறக்காது என்று பிரச்சாரம் செய்தனர். ஆனால், அதே நாள் இரவில் ராகுல்காந்தி ரகசியமாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வானிலை தொடர்பான உயர்மட்டக் கூட்டம்... எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அறிவுறுத்தல்!!

இதனால் தான் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு குழந்தை பிறக்காது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பாஜக தொண்டர்கள் சாலை மற்றும் கழிவுநீர் பிரச்சினைகள் போன்ற சிறிய பிரச்சினைகளுக்கு பதிலாக லவ் ஜிகாத் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது சர்ச்சையானது.

இதையும் படிங்க: பிரம்மபுரம் கழிவு ஆலை தீவிபத்து… தீயைணைக்கும் பணியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கருடா!!

இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்து வரும் நளின்குமார் கட்டீல் தற்போது ராகுல் காந்தி குறித்து இழிவாக பேசியதற்கு கர்நாடக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறான கருத்துகள் பாஜகவின் கலாச்சாரத்தை குறிக்கின்றன. எதிர்காலத்தில் கர்நாடகாவில் இதுபோன்ற தலைவர்கள் ஆட்சியமைக்க வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?
சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி