12 மணி நேர 'ஆப்ரேசன்..' 2 தீவிரவாத அமைப்புகள் காலி.. அசால்ட்டாக சம்பவம் செய்த பாதுகாப்பு படையினர் !

By Raghupati RFirst Published Jan 30, 2022, 11:03 AM IST
Highlights

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஹதுராவில் இந்திய ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். புல்வாமா மாவட்டம் நயிரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிளும், புத்கம் மாவட்டத்தின் சரார் ஐ ஷரீப் பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

Latest Videos

இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறும்போது , ‘12மணி நேரமாக நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் கமாண்டராக செயல்பட்ட ஜாகித் வானி. மற்றொருவன் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி. மற்ற 3 பேரும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். 

இது, பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.’ என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கி சூடு நடத்த இடத்தில் இருந்து, துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையிர் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று, தெற்கு காஷ்மீரின்  பிஜ்பெஹாரா பகுதியில் 53 வயது காவலர் அவரது இல்லத்திற்கு அருகே  பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமைக் காவலர் அலி முகமது கனி மீது அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!