டோலோ அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் காலி..! பகீர் கிளப்பும் பிரபல டாக்டர்

By Raghupati R  |  First Published Jan 30, 2022, 8:51 AM IST

கொரோனா கோர தாண்டவமாடிய மார்ச் 2020 முதல் டோலோ 65 மாத்திரை ரூ. 567 கோடிக்கு விற்பனையாகி, தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.


இந்த டோலோ 650 தான். அதை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். இதுகுறித்து பேசிய டாக்டர். செங்கோட்டையன் ஜோன்ஸ், ‘ சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் முக்கிய மாத்திரை இது. பல்வேறு பாராசிட்டமால் மாத்திரைகளில் ‘டோலோவும்’ ஒன்று.

Tap to resize

Latest Videos

காய்ச்சலில் இருந்து வெளி வருவதற்கு இது உதவுவது என்றாலும், அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க முடியும் என்பதால், பொதுமக்கள் பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவர் பரிந்துரை இன்றி பலரும் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். 

கல்லீரலில் ஏற்கனவே பாதிப்பு இருப்பவர்கள் டோலோ என்ற இந்த  பாராசிட்டமாலை  அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் எளிதில் பாதிப்பு அடைந்து விடும். மது அருந்துபவர்களுக்கும் இது தொந்தரவை கொடுக்கும்.காய்ச்சலை தற்காலிகமாக குறைக்கிறதே தவிர, முழுமையாக குணப்படுத்துவதில்லை. 

undefined

 

கல்லீரல் பிரச்சினைகளை மட்டுமின்றி ரத்தசோகை, மஞ்சள் காமாலை,உடல் வீக்கம்,சருமப் பிரச்சினைகள், தடிப்புகள்,டயேரியா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.நாம் சாப்பிடும் ஒரு மருந்தோடு மற்றொரு மருந்து எடுத்துக் கொள்ளும்போது கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வது நல்லது.  நாம் எந்தவொரு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும், மருத்துவரின் பரிந்துரையின் படி சாப்பிடுவதுதான் உடல்நலத்திற்கு நல்லது’ என்று கூறினார்.

click me!