
இந்தியாவிற்குள் ஊடுருவி, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வழங்க பாகிஸ்தான் ராணுவம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் ஏழை மக்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் இதற்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதில் அவர்கள் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த மக்களை பாகிஸ்தான் ராணுவம் கொன்று வருகிறது. இந்த சம்பவங்களை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ இந்தியாவிற்குள் வாய்ப்புள்ளது என்று பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த தகவல்களின் அடிப்படையில், ஜூன் 15-ம் தேதி ஜுமாகுந்த் நார் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என ஒரு குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் கிடைத்தது. அன்றைய தினம் இரவு கெரான் செக்டார் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டது,
மணிப்பூர் களத்தில் ராகுல் காந்தி! 2 நாள் பயணம்... வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
ஜூன் 16 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய ஐந்து பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை கொல்லப்பட்டனர். இரவு முழுவதும் இந்த நடவடிக்கை தொடர்ந்த நிலையில், அதிகாலையில் அப்பகுதியில் விரிவான தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், 5 ஏகே ரக துப்பாக்கிகள், 14 கையெறி குண்டுகள், 500 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, ஜூன் 22/23 இடைப்பட்ட இரவில், இந்திய இராணுவத்தின் வீரர்கள், மச்சல் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக காலா காட்டில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு, இரவு நேரத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4.30 என்ற மணியளவில், பாகிஸ்தானில் இருந்து நான்கு பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பதை அவதானிக்க முடிந்தது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 9 ஏகே ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள், நான்கு கைக்குண்டுகள், 288 ஏகே துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் பிஸ்டல் ரவுண்டுகள், 55 சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைபற்றப்பட்டன. இந்த வெற்றிகரமான நடவடிக்கை பயங்கரவாதிகளின் நார்கோ நிதி மற்றும் பயங்கரவாத திட்டங்களுக்கு பெரும் அடியாக இருக்கும் என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...