திடீர் பயணமா? இந்த வழியில் புக் செய்தால் ரயில் டிக்கெட் கிடைப்பது உறுதி! முழு விவரம் இதோ...

By SG Balan  |  First Published Jun 27, 2023, 11:21 PM IST

ரயில் பயணத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதைத் தவிர்க்க அவசரகால பயன்பாட்டிற்கான HO ஒதுக்கீட்டை இந்திய ரயில்வே வழங்குகிறது.


ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு காரணங்களால் டிக்கெட் கிடைக்காமல் போகும். அதுவும் பண்டிகைக் காலங்களிலும் வார இறுதி நாட்களை ஒட்டியும் பயணத்தைத் திட்டமிட்டால், ரயில் டிக்கெட் அவ்வளவு ஈசியாகக் கிடைத்துவிடாது. கடைசி நேரத்தில் பணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு தக்கல் டிக்கெட் முன்பதிவு வாய்ப்பு உள்ளது. அதில் மிக அதிகமான போட்டி காணப்படும்.

இந்த நிலையில், முக்கியத் தேவையை முன்னிட்டு பயணம் செய்ய நினைப்பவர்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்யும்போது டிக்கெட் கிடைக்க என்ன வாய்ப்பு உள்ளது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதற்கு இந்திய ரயில்வே ஒரு தீர்வை வைத்திருக்கிறது. ரயில் டிக்கெட் புக் செய்து வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக டிக்கெட் கிடைக்க ஒரு வழி உள்ளது.

Tap to resize

Latest Videos

பக்ரீத் தொடர் விடுமுறை! 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

இதற்காகவே HO என்ற ஒதுக்கீட்டை இந்திய ரயில்வே வைத்துள்ளது. இந்த கோட்டாவில் அவசரத் தேவைகளுக்காக பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்கும். இது அதிகாரபூர்வமான உயர்நிலை ஒதுக்கீடு என குறிப்பிட்டப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு நேரத்திலேயே HO ஒதுக்கீட்டை அப்ளை செய்ய முடியாது. டிக்கெட் புக் செய்யும்போது வெயிட்டிங் லிஸ்டில் விழுந்துவிட்டால், இந்த ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியும். இதற்காக பணத்துக்கு ஒரு நாளுக்கு முன்பே ரயில் நிலையத்திற்குச் சென்று படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மணிப்பூர் களத்தில் ராகுல் காந்தி! 2 நாள் பயணம்... வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!

ஏனென்றால், அவசரகாலத்தில் பயணிகள் பயன் அடைய வேண்டும் என்பதற்காகவும் விஐபிகளுக்காகவும் மட்டுமே இந்த ஒதுக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறைவான சீட்டுகள் மட்டுமே இருக்கும். முக்கியப் பிரமுகர்கள் பலர் ரயிலில் பயணிக்க இதை பயன்படுத்துவார்கள். சாமானிய மக்களும் அவசரகால பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்போது இந்த கோட்டா மூலம் பயன் பெறலாம்.

HO கோட்டா ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் தான் டிக்கெட் கொடுக்கப்படும். ஒரு நாளுக்கு முன்பே படிவத்தைப் பூர்த்தி செய்து முன்பதிவு கவுண்டரில் கொடுத்தால், அதனை முன்பதிவு மேற்பார்வையாளர் பார்வையிட்டு சீட் கொடுப்பது பற்றி முடிவு செய்வார். டிக்கெட் கிடைத்துவிட்டதா இல்லையா என்பதை சார்ட் தயாரிக்கப்பட்ட பின்புதான் தெரிந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் மாற்றம்; அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி உத்தரவு... பின்னணி என்ன?

click me!