விசா விவகாரம்... கடைசி நேரத்தில் கழுத்தறுத்த சீனா! இந்திய வுஷூ அணியின் சீனப் பயணம் திடீர் ரத்து!

By SG Balan  |  First Published Jul 27, 2023, 11:39 PM IST

சீன அதிகாரிகள் இந்திய வுஷூ அணியில் உள்ள 3 அருணாச்சலப் பிரதேச வீரர்களுக்கு பிரதான விசா அளிக்காததை வெளியுறவுத்துறை வன்மையாக க் கண்டித்துள்ளது.


உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சீனாவுக்குச் செல்லவிருந்த இந்திய வுஷூ அணியின் பயணம் திடீரென ரத்தாகியுள்ளது. இந்திய அரசு வீரர்களை விமானத்தில் ஏற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் அவர்கள் திட்டமிட்டபடி விமானத்தில் பயணிக்கவில்லை.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இந்திய வுஷூ வீரர்களுக்கு சீனா இந்தியர் என்ற அடையாளத்துடன் விசா  வழங்காததைக் காரணம் காட்டி இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், இந்த விவகாரத்தில் சீனாவிடம் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது என்றார். "சீனாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு நிகழ்வில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த இருந்த சில இந்திய குடிமக்களுக்கு ஸ்டேபிள் விசா வழங்கப்பட்டிருப்பது அரசின் கவனத்துக்கு வந்திருக்கிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருட்டில் தொடங்கிய காதல் கதை! மொபைலை அபேஸ் செய்த நபருடன் காதலில் விழுந்த பெண்!

"இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் எங்கள் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். சீனத் தரப்பிடம் எங்கள் வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். மேலும் இதுபோன்ற செயல்களுக்கு தகுந்த பதிலளிப்பதற்கான உரிமை இந்தியாவுக்கு இருக்கிறது" என்றும் பாக்சி கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது?

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கு சீன அதிகாரிகளால் ஸ்டேபிள் விசா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை எழுந்தது. இந்தியா-சீன உறவில் ஸ்டேபிள் விசா வழங்குவது சர்ச்சைக்குரியதாக உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திற்கு மீண்டும் மீண்டும் பிராந்திய உரிமை கோரும் சீனா, அந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு இந்தியர் என்ற அடையாளத்துடன் விசா அளிக்க மறுக்கிறது.

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் நேற்றிரவு புறப்படவிருந்தனர். அருணாச்சலத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு விசா கிடைக்க தாமதமாகும் காரணத்தால், இன்று இரவு புறப்பட இருந்தனர். இச்சூழலில் 3 வீரர்களுக்கான விசா விஷயத்தில் சீன அதிகாரிகளின் நடவடிக்கை இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனால், வெளியுறவுத்துறை இந்திய வுஷூ அணியைச் சேர்ந்த எவரும் போட்டியில் பங்கேற்க சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள் சீனாவுக்குச் செல்வதை விடுத்து வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்திய அணி சீனாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

பெண்ணை மரத்தில் கட்டி, ஆடைகளைக் கிழித்து, அடி உதை... ஜார்க்கண்டில் நடந்த கொடூர சம்பவம்

click me!