மணிப்பூர் இந்தச் சம்பவம் குறித்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் பிசிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெண்களை ஆடையின்றி இழுத்துச் சென்ற கொடுமையின் வீடியோவின் வெளியானது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் இந்தச் சம்பவம் குறித்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வன்முறைச் சம்பவங்களைக் கண்டு வரும் மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே விசாரணையை நடத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்குப் பின் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, மணிப்பூர் சம்பவத்தை வீடியோ பதிவு செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ பதிவு செய்த அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக மணிப்பூரில் இருந்து வந்த வீடியோ, இரு அவைகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி நாடாளுமன்றத்தில் பேசவேண்டும் எனக் கோருகின்றன.
ஆனால், பிரதமர் நாடாளுமன்றத்துக்கே வராமல் தட்டிக்கழிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அரசு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன. சபாநாயகர் ஓம் பிர்லா அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் அதன் மீது விசாரணை நடைபெற வாய்ப்பு உள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவது உறுதியாகத் தெரிகிறது. ஆனால், ஆனால் மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச நிர்ப்பந்திப்பதே இதன் நோக்கம் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
மணிப்பூர் குறித்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் பதில் அளிப்பார் என மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், மணிப்பூர் விவாதத்திற்கு அரசாங்கம் ஒத்துழைப்பைக் கோர வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் அவைக்கு வரவேண்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டி! டிடிவி தினகரன் அறிவிப்பு