ஜன.,17 முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா!

By Manikanda Prabu  |  First Published Nov 16, 2023, 6:57 PM IST

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 ஜனவரி 17ஆம் தேதி தொடங்கவுள்ளது


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 9ஆவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023 நடைபெறுகிறது. 'அமிர்த கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மக்கள் தொடர்பு' என்ற கருப்பொருளில் இந்த அறிவியல் திருவிழா நடத்தப்பட உள்ளது.

மாணவர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும் தனிநபர்களுக்கும் உத்வேகம் அளிப்பதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு!

மொத்தம் 17 கருப்பொருள்களில் நடைபெற உள்ள இந்த அறிவியல் திருவிழா பங்கேற்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குவதோடு அறிவியல் சாதனைகளை வெளிப்படுத்தும்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023இல், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் கருத்தரங்குகள், பேச்சாளர்களுடனான கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், போட்டிகள், பட்டறைகள், அறிவு பகிர்வு நடவடிக்கைகள், தொழில்நுட்ப நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

வளமான இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இந்த அறிவியல் திருவிழா பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு முறை நடைபெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டில், விண்வெளித் துறை, அணுசக்தித் துறை ஆகியவை இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!