உடை மாற்றும் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி!

By Manikanda Prabu  |  First Published Nov 16, 2023, 5:58 PM IST

நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என தெரியவந்துள்ளது


டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், இணையதளம் முழுவதும் போலி செய்திகள் பெருகிக் கிடக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன.

அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், போலி வீடியோக்கள் தொடர்பான கவலைகள் எழுப்பப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, அது தொடர்பான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டது.

உள்ளாட்சி பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்த நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்க  ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் இணையதளங்கள் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளன.

வீடியோ சரிபார்ப்புக் கருவியான InVIDஐப் பயன்படுத்தி வீடியோவை கீஃப்ரேம்களாகப் பிரித்து, அவற்றில் சிலவற்றை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்ததில், The Sun இணையதளம் வெளியிட்ட ஆடைகளைப் பற்றிய கட்டுரையில் இதேபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கட்டுரையில் வைரலான ஒரு வீடியோவின் ஸ்கிரீன்ஷாட் இடம்பெற்றிருந்தது. அதன்படி, அப்பெண்ணை TikTok பயனர் 'rosiebreenx' என்பது தெரியவந்துள்ளது. மலிவு விலையில் கோடை ஆடைகள் பற்றி ஜூன் மாதம் 5ஆம் தேதி ரோஸி பிரீன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரோஸி பிரீன் வெளியிட்ட அந்த வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

click me!