பிரதமரின் அறிவிப்பு அரசாங்க அறிவிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பு அரசாங்கத்தின் அறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வருகிற டிசம்பர் மாதம் நிறைவடையவுள்ள ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதே அறிவிப்பை மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பு அரசாங்கத்தின் அறிக்கையில் ஏன் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நவம்பர் 4ஆம் தேதி சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 இன் மறுபெயரிடப்பட்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். ஆனால், நேற்று மாலை வெளியான மோடி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் PMGKAY திட்டமானது ஜனவரி 1, 2023 இல் தொடங்கும் ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரால் அறிவிக்கப்பட்ட நீட்டிப்பைப் பற்றிய எந்த குறிப்பும் அதில் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
4 नवंबर को छत्तीसगढ़ में चुनाव प्रचार के दौरान प्रधानमंत्री ने घोषणा की कि प्रधानमंत्री ग़रीब कल्याण अन्न योजना (PMGKAY) — जो कि राष्ट्रीय खाद्य सुरक्षा अधिनियम, 2013 की रीब्रांडिंग है — को अगले 5 वर्षों के लिए बढ़ाया जा रहा है।
लेकिन कल शाम मोदी सरकार की एक आधिकारिक प्रेस… pic.twitter.com/2Xn4XBFat5
“அப்படியானால் உண்மையில் என்ன நடக்கிறது? பிரதமரின் அறிவிப்பு அவரது அரசாங்கத்தின் செய்திக்குறிப்பில் ஏன் பிரதிபலிக்கவில்லை.?” எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர்!
முன்னதாக, ஜனவரி 1, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு PMGKAY இன் கீழ் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவதாக மத்திய அரசு நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.