உலகின் மிக மாசுபட்ட முதல் 20 நகரங்களில் இந்தியாவில் 15 நகரங்கள் உள்ளது.. முழு பட்டியல் இதோ..

By Ramya sFirst Published Jun 6, 2023, 10:43 PM IST
Highlights

உலகின் மிக மாசுபட்ட முதல் 20 நகரங்களில் இந்தியாவில் 15 நகரங்கள் உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக காற்றுத் தர அறிக்கை 2022இல் இந்தியா உலகின் எட்டாவது மிகவும் மாசுபட்ட நாடாக மாறி உள்ளது. உல்க சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட இந்தியாவில் 10 மடங்கு காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் சாட் (Chad), ஈராக், பாகிஸ்தான், பஹ்ரைன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் 5 மிகவும் மாசுபட்ட நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில், முந்தைய ஆண்டை விட மூன்று இடங்கள் பின் தங்கி,இந்தியா 8-வது இடத்தைப் பிடித்தது. 

IQAir நிறுவனம் கணக்கிட்ட சராசரியானது, இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது. சுவிட்சர்லாந்தின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir வெளியிட்ட வருடாந்திர உலக காற்றின் தர அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 15 இந்திய நகரங்கள் ஆகும்.

எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து திடீரென வெளியேறிய புகை.. பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்

உலகில் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களின் பட்டியல் :

  • லாகூர், பாகிஸ்தான்
  • ஹோட்டன், சீனா
  • பிவாண்டி, இந்தியா
  • டெல்லி, இந்தியா
  • பெஷாவர், பாகிஸ்தான்
  • தர்பங்கா, இந்தியா
  • அசோபூர், இந்தியா
  • என்’ஜமீனா, சாட்
  • புது தில்லி, இந்தியா
  • பாட்னா, இந்தியா
  • காசியாபாத், இந்தியா
  • தருஹேரா, இந்தியா
  • பாக்தாத், ஈராக்
  • சாப்ரா, இந்தியா
  • முசாபர்நகர், இந்தியா
  • பைசலாபாத், இந்தியா
  • கிரேட்டர் நொய்டா, இந்தியா
  • பகதூர்கர், இந்தியா
  • ஃபரிதாபாத், இந்தியா
  • முசாபர்பூர், இந்தியா

டெல்லி நான்காவது மிகவும் மாசுபட்ட நகரமாகவும், உலகளவில் இரண்டாவது மிகவும் மாசுபட்ட தலைநகரமாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் 40 சதவீத காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்துத் துறை பங்களிப்பதாகக் கூறியதுடன், சிக்கலைக் குறைக்க பசுமையான எரிபொருள் மாற்றுகளை உருவாக்க தொழில்துறைக்கு அறிவுறுத்தினார்.

GH2 உச்சிமாநாட்டில் பேசிய கட்கரி, இந்த பங்களிப்பில் 90 சதவிகிதம் தான் கையாளும் சாலைப் போக்குவரத்துத் துறையில் இருந்து வருகிறது என்றார். மேலும் “நாட்டின் 40 சதவீத காற்று மாசுபாட்டிற்கு நாங்கள் (போக்குவரத்து) பொறுப்பு… போக்குவரத்து அமைச்சராக, உண்மையில் அதற்கு நான்தான் பொறுப்பு,” என்று கூறினார். காற்று மாசுபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் புது தில்லியை மேற்கோள் காட்டியும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா ரயில் விபத்தின் பலி எண்ணிக்கையை மீண்டும் திருத்திய அரசு.. மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர்?

click me!