பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இஸ்லாத்திற்கு மாற்ற முயன்ற முஸ்லீம் நபர்- ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு..

By Ramya sFirst Published Jun 6, 2023, 10:14 PM IST
Highlights

இந்துவாக தன்னை காட்டிக் கொண்டு, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம் நபருக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்து பெண்ணுடன் உடல் உறவை ஏற்படுத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்த, தனது மத அடையாளத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம் நபருக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி சௌரப் ஷியாம் ஷாம்ஷேரி அடங்கிய அமர்வு, இது ஹனிட்ராப் வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவரை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைக்க அந்த பெண் ஏமாற்றியதாகவும் கூறிய வாதத்தை நிராகரித்தது.

பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் 28, 2022 அன்று முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தார். அந்த எஃப்.ஐ.ஆரில், குற்றம் சாட்டப்பட்ட சந்த் பாபு தன்னை விஷால் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அவரிடம் பேசத் தொடங்கியபோது, அவர் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இருவரும் சந்தித்த போது அவர் முஸ்லீம் என்று தெரியவந்ததாகவும், அந்த நபர் தனது புகைப்படங்களை வைரலாக்குவதாகவும், பலமுறை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் மிரட்டியதாக அப்பெண் குற்றம்சாட்டி உள்ளார். 

மதவாத பிரச்சினையை மணிப்பூரில் கொளுத்திப் போட்ட பாஜக.. சசிகாந்த் செந்தில் சொன்ன பரபரப்பு தகவல்

ஆகஸ்ட் 24, 2022 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​அவரது உண்மையான பெயர் சந்த் பாபு என்பதையும், அவர் ஒரு முஸ்லிம் என்பதையும் அறிந்ததாக தெரிவித்துள்ளார். அவர் ஏன் தன்னை ஒரு இந்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் என்று அவரிடம் கேட்டதாக கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் தன்னை முஸ்லீமாக மாற கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த நபர் தன்னை ஹோட்டலில் வைத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

பின்னர் "அதிர்ஷ்டத்தால்" அந்த ஹோட்டலில் இருந்து தப்பியதாகவும், IPC இன் பிரிவுகள் 376(2)(n), 420, 506 மற்றும் UP சட்டத்திற்குப் புறம்பாக மதமாற்றம் தடுப்புச் சட்டத்தின் 3/5 ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும், குற்றம்சாட்டப்பட்ட நபர் ஹனி – டிராப்பில் சிக்கியதாக பதிவுகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், குற்றம்சாட்ட நபருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. ஹோட்டலில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஆதார் அட்டை நகல் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணின் கையொப்பம் ‘சீமா’ என்ற பெயரில் இருந்ததாகவும் அந்த ஹோட்டலின் மேலாளர் கூறியதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பதிவேட்டில் தனது பெயர் முஸ்லீம் என்று காட்டியது என்பது அப்பெண்ணுக்கு தெரியாது என்பதை காட்டுகிறது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஒடிசா ரயில் விபத்தின் பலி எண்ணிக்கையை மீண்டும் திருத்திய அரசு.. மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர்?

click me!