இந்தியாவில் 1985 வரை பரம்பரை சட்டம் அமலில் இருந்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பரம்பரை வரி விதிப்பு குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கூறிய கருத்து, இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. சாம் பிட்ரோடா இதுகுறித்து பேசிய போது "ஒருவருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறந்த பிறகு, 45 சதவீத சொத்து அவரது குழந்தைகளுக்கும், 55 சதவீத சொத்து அரசாங்கத்திற்கும் செல்கிறது. இந்தியாவில் அத்தகைய சட்டம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாங்கள் பணக்காரர்களுக்கு மட்டுமின்றி மக்களின் நலன் சார்ந்த கொள்கைகளைப் பற்றி பேசுகிறோம், ”என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். ஆனால் இந்தியாவில் 1985 வரை பரம்பரை சட்டம் அமலில் இருந்தது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பரம்பரை வரி சட்டம் என்ன சொல்கிறது?
முதலாவதாக, அமெரிக்காவில் வரி என்பது பொதுவானது அல்ல. அங்கு மொத்தம் உள்ள, 50 மாகாணங்களில் 6மாநிலங்களில் மட்டுமே வரி அமலில் உள்ளது. இறந்த நபரின் சொத்துகளைப் பெறுபவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. இறந்த நபர் வாழ்ந்த அல்லது சொத்து வைத்திருக்கும் மாநிலத்தைப் பொறுத்து வரிவிதிப்பு மாறுபடும். அயோவா, கென்டக்கி, மேரிலாந்து, நெப்ராஸ்கா, நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய 6 அமெரிக்க மாகாணங்களில் மட்டுமே பரம்பரை வரிகள் விதிக்கப்படுகிறது..
அமேதியில் மே 2ஆம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார்: இளைஞர் காங். தலைவர் தகவல்
பரம்பரை வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது
அமெரிக்காவில் பரம்பரை வரி என்பது கூட்டாட்சி வரி அல்ல இறந்த நபருடனான பரம்பரை உறவு மற்றும் சொத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரி விதிக்கப்படுகிறது. விலக்கு வரம்பை மீறும் பரம்பரைப் பகுதிக்கு மட்டுமே இது பொருந்தும். வரி விகிதங்கள் ஒற்றை இலக்கங்களில் இருந்து 18% வரை செல்லலாம்.
எடுத்துக்காட்டாக, பென்சில்வேனியா மாகாணத்தில், நேரடி சந்ததியினருக்கு (வரிவழி வாரிசுகள்) இடமாற்றம் செய்வதற்கு வரி விகிதம் 4.5%, உடன்பிறந்தவர்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு 12% மற்றும் பிற வாரிசுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு 15%. என்று விதிக்கப்படுகிறது.
அயோவா மாகாணத்தில் சொத்து மதிப்பு $25,000 (ரூ. 20.83 லட்சம்) குறைவாக இருந்தால், அதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. மேரிலாந்தில், $50,000 (ரூ. 41.66 லட்சம்) க்கும் குறைவான பரம்பரைப் சொத்துக்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வாரிசு சொத்து உரிமையாளருடன் நெருக்கமாக இருந்தால், குறைந்த வரி விகிதம் விதிக்கப்படும். 6 மாகாணங்களிலும், உரிமையாளரின் வாழ்க்கைத் துணைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் எவ்வளவு பரம்பரை விதி விதிக்கப்படுகிறது?
இங்கிலாந்தில், 325,000 பவுண்டுகள் (ரூ 3.37 கோடி) மதிப்புள்ள சொத்துகளுக்கு 40% பரம்பரை வரி விதிக்கப்படுகிறது. ஜப்பானில் அதிக பரம்பரை வரி விகிதம் உள்ளது, தற்போதைய அதிகபட்ச விகிதம் 55% ஆகும். ஒவ்வொரு சட்டப்பூர்வ வாரிசும் எவ்வளவு பணம் பெறுகிறார்கள் என்பதன் அடிப்படையில் வரி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. தென் கொரியா 50% பரம்பரை வரி விகிதத்தைக் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன்-ஹீ இறந்த போது, அவரின் 12 டிரில்லியனுக்கும் அதிகமான ($10.78 பில்லியன்) வாரிசு வரிகளை செலுத்துவதாகக் கூறியது.
இந்தியாவில் பரம்பரை வரி இருந்ததா?
இந்தியாவிலும் பரம்பரை வரிச் சட்டம் இருந்தது. ஒரு நபர் இறக்கும் போது கணக்கிடப்படும் ஒரு வகை வரி, இது எஸ்டேட் டூட்டி சட்டம், 1953 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. சொத்தின் பரம்பரைப் பகுதியின் மொத்த மதிப்பு விலக்கு வரம்பை மீறினால் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்ம். இந்தியாவில், இது சொத்துக்களில் 85% ஆக உயர்ந்தது. குறைந்தபட்சம் ₹ 1.5 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு 7.5% வரி விதிக்கப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதே நோக்கமாக இருந்தது, ஆனால் 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்த வரியை ரத்து செய்தார்.
எஸ்டேட் வரியின் விளைச்சல் சுமார் ₹ 20 கோடி என்றாலும், அதன் நிர்வாகச் செலவு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. எனவே, 16 மார்ச் 1985 அன்று அல்லது அதற்குப் பிறகு ஏற்படும் மரணங்கள் தொடர்பாக எஸ்டேட் வரி விதிப்பை ரத்து செய்வதாக ராஜீவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த வி.பி சிங் கூறினார்.
கூகுள் தேடலில் 20 ஆண்டுகால சாதனையை முறியடித்த பரம்பரை வரி!
சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க உதவவில்லை அல்லது அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால் 1985 இல் இந்தியாவின் பரம்பரை வரி ரத்து செய்யப்பட்டது. 1984-85 இல், எஸ்டேட் வரிச் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட மொத்த வரி ரூ. 20 கோடி. ஆனால் சேகரிப்பு செலவு மிகவும் அதிகமாக இருந்தது, ஏனெனில் சிக்கலான கணக்கீட்டு அமைப்பு நிறைய வழக்குகளை உருவாக்கியது.
எடுத்துக்காட்டாக, 1980-81 வழக்கமான வரவு செலவுத் திட்டத்தின்படி, 1979-80 காலகட்டத்தில் மொத்த வரி வருவாய் ரூ.11,447 கோடியாக இருந்தது, அதில் எஸ்டேட் வரியானது ரூ.12 கோடி மட்டுமே பங்களித்தது, பின்னர் அது ரூ.13 கோடியாக மாற்றப்பட்டது, அதாவது 0.1% மொத்த மொத்த வரி வருவாயில். பட்ஜெட்டில், எஸ்டேட் வரி வசூல், 13 கோடி ரூபாயாக இருக்கும் என, கணிக்கப்பட்டது.
1978-79 பட்ஜெட்டில், முந்தைய பட்ஜெட்டில் வரி வருவாய் ரூ. 9,005.46 கோடியில் ரூ.10.75 கோடியாக இருந்தது. 1978-79 பட்ஜெட்டில் ரூ.9,636 கோடியில் ₹ 11 கோடியாக இருந்தது, அதாவது மொத்த வரி வருவாயில் 0.1%. மோசமான அமலாக்கம் மற்றும் வரி வசூலில் உள்ள ஓட்டைகள் உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் எஸ்டேட் வரி செலுத்துவதை தவிர்த்தனர்