செல்லாத நோட்டுக்களை டெபாசிட் செய்றீங்களா? - வருமானவரித்துறை நோட்டீஸ் காத்துக்கிட்டு இருக்கு

First Published Dec 20, 2016, 9:26 AM IST
Highlights


வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதில் புதிய கிடுக்கிப்பிடிகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. 

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், புழக்கத்தில் இருந்த ரூ. 1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மக்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்க பல கெடுபிடிகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், கருப்பு பணத்தை வங்கியில் அதிகமாக டெபாசிட் செய்வதை தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி ரிசர்வ் வங்கி  புதிய உத்தரவுகளை நேற்று பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

அதன்படி, தனிநபர் ஒருவர், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனது வங்கிக்கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இம்மாதம் 30-ந்தேதிக்குள் பல முறை டெபாசிட் செய்ய முடியாது, ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். 

 செல்லாத ரூபாய்களாக ரூ. 5 ஆயிரம்வரை வங்கிக்கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட்செய்யலாம். அதற்கு தடையில்லை. உதாரணமாக ரூ. 3 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என எத்தனை முறைவேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். 

ஆனால், நீங்கள் சில்லறையாக இம்மாதம் 30ந் தேதி வரை செய்யும், அனைத்து டெபாசிட்களையும் வருமானவரித்துறையினர் கண்கொத்திப்பாம்பாக கவனிப்பார்கள். அவர்கள் நோட்டீஸ் அனுப்பம் பட்சத்தில் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். 

செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக  தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யும்போது வங்கி அதிகாரிகள் இருவர் அந்த கணக்கு வைத்து இருப்போரிடம் விசாரணை நடத்துவார்கள். ஏன் முன்கூட்டியே இதை டெபாசிட் செய்யவில்லை,  உள்ளிட்ட பல கேள்விகளை முன் வைப்பார்கள். அதற்குரிய மனநிறைவான பதில் அளிக்க வேண்டும். அந்த பதில்களை அனைத்தும் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்படும். தேவைப்படும் போது விசாரணை செய்யப்படும். விசாரணை, மற்றும் ஆய்வுக்குபின் அவர்களின் மனதுக்கு நிறைவான பதில் அளிக்கும் பட்சத்தில் டெபாசிட் செய்ய முடியும்.

click me!