
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, பரிசோதனையை அதிகப்படுத்தி, தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இதன்படி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷான் 6 மாநிலங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
அடுத்துவரும் பண்டிகைக் காலங்களில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். இதனால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆதலால் 6 மாநிலங்களிலும் தங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையான ஆர்டி பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது என்பதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும், அந்தமாவட்டங்களில் மேலும் பரவல் அதிகமாகதவகையில் தடுக்க வேண்டும்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களா? காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?
டெல்லியில் தினசரி பதிவான கொரோனா தொற்றில் அதிகபட்சமாக 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா தொற்றில் டெல்லியின் பங்கு மட்டும் 8.2 சதவீதமாகும். கடந்த ஜூலை 29ம் தேதியுடன் முடிந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தினசரி கொரோனா பரவல் 1.86 மடங்கு அதிகரி்த்துள்ளது.கேரளாவில் தினசரி சராசரியாக 2,347 பேர்கடந்த மாதம் பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் 2,135 பேர் பாதிக்கப்பட்டனர். ஆதலால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவல் குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றின் மூலம் வரும் அறிகுறிகளும், இன்ப்ளூயன்சா மற்றும் சாரி காய்ச்சலுக்கு வரும் அறிகுறிகளிலும் சில வேறுபாடுகள் இருக்கும். ஆதலால், அதை மாவட்டந்தோறும் கூர்ந்து கண்காணித்தல் அவசியமாகும். கொரோனா பரவலின் தொடக்கத்திலேயே அதைக் கண்டறிந்த அதற்கான தடுப்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
varsha sanjay raut: சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மனைவியும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜர்
சர்வதேச பயணத்திலிருந்து வரும் பயணிகளின் உடலில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள், கொரோனா பரவல் பகுதிகள், உள்ளூரில்தீவிரமாகப் பரவிய இடங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளை சேகரித்து வைப்பது முக்கியம். இந்த மாதிரிகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மரபணு பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பலாம்.
மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடும் சந்தைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ரயில்வே நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் முறைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம்.
மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். தகுதிவாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.