7 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ் ஆன சிறுமி.. 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!!

By Dhanalakshmi GFirst Published Aug 6, 2022, 2:37 PM IST
Highlights

 வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த சிறுமி தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறார். இந்த சிறுமியை ஜோசப் டிசௌசா (50), இவரது மனைவி சோனி (37) இருவரும் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்த இந்த தம்பதிகள் குழந்தையை கடத்தி வளர்த்து வந்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் டிஎன் நகர் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜேந்திர தோண்டு போஸ்லே. இவர் பதவியில் இருந்தபோது, 2008 - 2015ஆம் ஆண்டில் காணாமல் போன 166 பெண்களில் 165 பேரை தனது டீம் உதவியுடன் கண்டுபிடித்து விட்டார். ஆனால், 7 வயதில் இருந்த ஒரு சிறுமியை மட்டும் இவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பணி ஓய்வும் பெற்று விட்டார்.

இந்த ஒரு சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்து வந்தார். பணியில் இருக்கும்போது இந்த சிறுமியை மட்டும் இரண்டு ஆண்டுகள் தேடி வந்துள்ளார். பலன் இல்லை. ஓய்வு பெற்ற பின்னரும் களத்தில் இறங்கினார். எப்படியாவது கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்தார். இவரது தேடுதலுக்கு பலன் கிடைத்துவிட்டது. நேற்று முன்தினம் வியாழக் கிழமை காலை 8.20 மணிக்கு இந்த சிறுமியை கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சிறுமி 2013ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி,  ஏழு வயதாக இருக்கும்போது காணாமல் போனார். ஆனால், இன்று 16 வயது பெண்ணாக வளர்ந்து இருந்தார். 

இதையும் படிங்க;- ஆணுக்கு நிகர் இல்ல, அதை விட ஒரு படி மேல... தொழில் துறையில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சிங்கப் பெண்கள்.

இதில் அதிசயம் என்னவென்றால், அந்தேரி மேற்கில் இந்த சிறுமியின் வீடு இருக்கிறது. வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த சிறுமி தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறார். இந்த சிறுமியை ஜோசப் டிசௌசா (50), இவரது மனைவி சோனி (37) இருவரும் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்த இந்த தம்பதிகள் குழந்தையை கடத்தி வளர்த்து வந்துள்ளார். 

இறுதியில் இந்தப் பெண்ணின் வீட்டின் அருகே ஒரு குழந்தை காப்பகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சிறுமி கண்டறியப்பட்டாள். ஆனால், இந்த சிறுமியை பார்ப்பதற்கு அவரது தந்தை இல்லை. இறந்துவிட்டார். இவரை பார்க்கச் சென்றபோது, போலீசார் தொலைவில் நின்று கொண்டனர். சிறுமியின் தாய் மற்றும் தாய் மாமா இருவரும் அந்தப் பெண்ணை அணுகினர். இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட சிறுமி கண் கலங்கினார். தாயும் கண் கலங்க தொலைவில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த போலீசார் மனம் உருகினர்.

சிறுமி காணாமல் போன 2013ஆம் ஆண்டில் தனது சகோதரனுடன் கார்பரேஷன் பள்ளிக்கு சென்றுள்ளார். வெளியே சுற்றிக் கொண்டு இருந்த சிறுமிதான் தனது குடும்பத்திற்கு ஏற்றவர் என்று நினைத்து அந்த சிறுமியை தனது வீட்டுக்கு கடத்திச் சென்று விட்டார் ஜோசப். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத காரணத்தால், பெற்றோர் டிஎன் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீசார் நோட்டீஸ் அடித்து தேடுவதை அறிந்த ஜோசப் இந்த சிறுமியை கர்நாடகா மாநிலத்தில் ரெய்ச்சூர் பகுதியில் இருக்கும் விடுதிக்கு அனுப்பி விட்டார். 2016ஆம் ஆண்டு ஜோசப் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துவிட்டது. இருவரை வளர்க்க பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. விடுதியில் இருந்த சிறுமியை அழைத்து வந்து அந்தேரி மேற்கில் இருக்கும் குழந்தைகள் காப்பக்கத்தில் ஜோசப் சேர்த்து விட்டார். அந்தேரி மேற்கில் இந்த குடும்பமும் குடிபெயர்ந்தது. இந்த சிறுமியின் பெற்றோர் வசித்து வந்த பகுதிக்கு அருகே குடிபெயர்ந்தனர். 

அந்த சிறுமியின் தாய் மாமா கூறுகையில், ''குழந்தையை கடத்திச் சென்ற ஜோசப் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. ஜோசப் மனைவி சிறுமியை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். அப்போது, இந்த தம்பதிகளின் குழந்தை தான் இல்லை என்பது உணர்ந்த சிறுமி அவர்களுடன் நாட்களை கடத்தி வந்துள்ளார்'' என்றார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ராஜேந்திர தோண்டு போஸ்லே தொடர்ந்து முயற்சித்து சிறுமியை அவரது குடும்பத்துடன் சேர்த்த விஷயம் பத்திரிகைகளில் வெளியாகி, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 166 சிறுமிகளையும் காப்பாற்றிய பெருமைக்குரியவர் ஆகிறார்.

இதையும் படிங்க;- பாம்பு கடித்து பலியான அண்ணன்.. இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த தம்பியும் அதேபோல பலி.. விடாமல் துரத்தும் பாம்பு.!

குழந்தைகள் காப்பகத்தின் மூலம் அந்த சிறுமி ஒருவர் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார். சிறுமியின் கதை கேட்டு, கூகுளில் தேடி புகைப்படங்களை, வெளியிட்டு சிறுமியின் அடையாளம் தெரிவதற்கு சிறுமி பணியாற்றிய இடத்தில் இருந்த பெண் உதவி இருக்கிறார். காணாமல் போன விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்களில் ஒன்றில், அந்தப் பெண் தொடர்பு கொண்டு பேச, இறுதியில் சிறுமியின் பெற்றோர் வீட்டின் அருகே இருந்த ரபிக் என்பவருக்கு தொலைபேசி அழைப்பு வந்து இருக்கிறது. இருபக்கமும் புகைப்படம் பரிமாறப்பட்டு சிறுமி அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.

click me!