ramdev: baba ramdev: கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்

Published : Aug 06, 2022, 02:08 PM IST
ramdev: baba ramdev: கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்

சுருக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது. மக்களை நோய் தொற்றிலிருந்து காக்க கூடுதலாக யோகா மற்றும் ஆயுர்வேதா அவசியம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி சரிவராது. மக்களை நோய் தொற்றிலிருந்து காக்க கூடுதலாக யோகா மற்றும் ஆயுர்வேதா அவசியம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு இதேபோன்று கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்படாது. மீண்டும் நோய்தொற்று ஏற்படும் என்று ராம்தேவ் கூறியது பெரும்சர்ச்சையானது. இவருக்கு எதிராக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. நீதிமன்றத்தில் அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்களா? காங்கிரஸுக்கு அடுத்த தலைவர் யார்?

ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நிருபர்களுக்கு நேற்றுபேட்டியளித்தார்.அப்போது அவரிடம், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஏற்கெனவேஇரு தடுப்பூசிகள் செலுத்தியபின்பும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

சுதந்திரத்துக்குப்பின் இந்திய பொருளாதாரத்தின் 10 முக்கிய சாதனைகள்

அதற்கு யோகா குரு ராம்தேவ் பதில் அளிக்கையில் “ யோகா, ஆயுர்வேதாவின் துணையின்றி, எந்தவிதமான தடுப்பூசியாலும், நோய் எதிர்ப்புச் சக்தியை கொரோனா வைரஸுக்கு எதிராக நிரந்தரமாக வழங்க முடியாது. எவ்வளவு பெரியஆளாகநீங்கள் இருந்தாலும், அதிபராக இருந்தால்கூட, மிகப்பெரிய மருத்துவராக இருந்தால்கூட இதுதான் நிலைமை. உலக சுகாதார அமைப்பில் இருக்கும். உயர்ந்த அதிகாரிகள் கூட கொரோனா தடுப்பூசி செலுத்தியபின்பும்கூட மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது. இந்த உலகம் யோகா, ஆயுர்வேதாவுக்கு மீண்டும் திரும்பும். மக்கள் துளசியைப் வளர்ப்பார்கள், கற்றாழையை தோட்டத்தில் வளர்ப்பார்கள், தங்கள் உடல்நலத்தைப் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ரெசிடென்ட் டாக்டர்ஸ் பெடரேஷன் அமைப்பு பிரதமர் மோடிக்கு ராம்தேவ் பேச்சு குறித்து கடிதம் எழுதியுள்ளது. அலோபதி மருத்துவம் குறித்து ஆதாரமற்ற பேச்சுகளை பேசுவது மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில்  ரெசிடென்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மீண்டும், அவதூறான, பொறுப்பற்ற முறையில் அலோபதி மருத்துவம், தடுப்பூசி குறித்து ராம்தேவ் பேசியுள்ளார்.

independence day 2022: யார் இந்த அம்ரிதா தேவி; மரத்தைக் காக்க 3 மகள்களுடன் உயிர்நீத்த இயற்கை போராளி!!

இதை கனிவுடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இதன் மீது கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஆராய்ச்சி, கடின உழைப்பு, நவீன மருத்துவம் ஆகியவை மீது மரியாதைக்குறைவான போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது, பொறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!