வங்கதேசத்து பெண்ணை மணந்த தமிழ் பெண்! பாரம்பரிய முறைப்படி சென்னையில் நடந்த திருமணம்

By Pothy Raj  |  First Published Sep 3, 2022, 12:25 PM IST

வங்கதேசத்து இந்துப் பெண்ணுக்கும், தமிழ் பெண் ஒருவருக்கும் சென்னையில் பிராமண முறைப்படி திருமணம் நடந்துள்ளது. 


வங்கதேசத்து இந்துப் பெண்ணுக்கும், தமிழ் பெண் ஒருவருக்கும் சென்னையில் பிராமண முறைப்படி திருமணம் நடந்துள்ளது. 

திருமணம் செய்து கொண்ட “இருவருமே பெண்கள்”. ஒருவர் உடல்ரீதியாக ஆணாகவும், மற்றொருவர் எல்ஜிபிடிபிரிவைச் சேர்ந்தவராக இருப்பதால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Tap to resize

Latest Videos

தமிழகத்தைச் சேர்ந்த சுபிக்ஸா சுப்பிரமணி பிறப்பால் பெண்ணாக இருந்தார். ஆனால், தனது 19வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தான் பெண் அல்ல, ஆண் என்பதை உணரத் தொடங்கினார். சுபிக்ஸா தற்போது கனடாவில் உள்ள கால்கேரிநகரில் வசித்து வருகிறார். 

திருமணம் செய்த கொண்ட பெண் டினா தாஸ், வங்கதேசத்து பாரம்பரிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் கால்கேரி நகரில் வசித்து வருகிறார். இருவரும் கனடாவில் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமாகி பழகி, தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

undefined

muruga mata: கர்நாடக மாடாதிபதிக்கு ஜாமீன் இல்லாத கைது வாரண்ட்! சொத்து வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

இதில் சுபிக்ஸா சுப்பிரமணி தற்போது கணக்குத் தணிக்கை அதிகாரியாக பணி செய்து வருகிறார். மதுரையில் பிறந்த வளர்ந்த சுபிக்ஸா சுப்பிரமணி, அதன்பின் கத்தார் நாட்டில் வாழ்ந்தார்.  தனது 19வயதில் உடலில் ஆண்தன்மை ஏற்படுவதை உணர்ந்த சுபிக்ஸா கனடாவுக்கு குடிபெயர்ந்தார். தனது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தனது தாயிடம் சுபிக்ஸா எடுத்துக்கூறினார். 

இதைக் கேட்டு சுபிக்ஸாவின் தாய் பூர்ணகலாபுஷ்பா சுப்பிரமணி அதிர்ச்சிஅடைந்தார். பூர்ணகலாபுஷ்பா சுப்பிரமணி கேல்கேரி நகரில் ப்ளேஸ்கூல் நடத்தி வருகிறார். தனது உடல்நிலை குறித்து தாயிடம் தெரிவித்து, தேவையானகவுன்சிலிங் வழங்கி தனது நிலையை சுபிக்ஸா புரிய வைத்துள்ளார்.

இந்த திருமணம் குறித்து சுபிக்ஸா கூறுகையில் “ நான்பிறந்தது மதுரையில் கத்தார்நாட்டில் வளர்ந்தேன். 19வயதில் என் உடலில் பெண் தன்மை மறைந்து ஆண் தன்மை வந்ததைப் பார்த்தபின், கனடாவுக்கு குடிபெயர்ந்தேன். என் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை என் பெற்றோர்களால் ஏற்க முடியவில்லை, பின்னர் அவர்களுக்கு முறைப்படி கவுன்சிலிங் அளித்தபின் புரிந்தனர்” எனத் தெரிவித்தார்

kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

சுபிக்ஸாவின் தாய் பூர்ணபுஷ்கலா கூறுகையில் “ சுபிக்ஸாவின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது, இந்தியாவில் உள்ள எங்களின் குடும்பத்தினர் எங்கள் தொடர்பை துண்டித்துவிடுவார்களே என்று அச்சப்பட்டோம். 

2வதாக இந்தச் சமூகத்தில் சுபிக்ஸா எவ்வாறு வாழப்போகிறார், தாய்மையை எவ்வாறு அடைவார் என்ற அச்சமும் இருந்தது. என் குடும்பத்தின் ஒற்றுமை முக்கியம், மகளின் மகிழ்ச்சி முக்கியம் என்று எண்ணினேன்” எனத் தெரிவித்தார்

வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ். திருமணம் செய்து 4 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்தபின் தன்னை ஒரு லெஸ்பியன் என்று உணர்ந்தார். இதனால் கணவரைவிட்டு பிரிந்தார். 

தனது நிலை குறித்து டினாதாஸ் கூறுகையில் “ நான் வங்கதேசத்தின் மவுலிபஜாரில் பிறந்து வளர்ந்தேன். மான்டியர் நகரில் கடந்த 2003ம் ஆண்டு முதல்எ என் சகோதரி வசித்து வந்தார். 

indian navy new flag: இந்திய கடற்படைக்கு புதிய கொடி: 4வது முறையாக மாற்றம்: முக்கியத்துவம் என்ன?

அங்கு அவருடன் நாங்களும் சென்றோம். ஆனால், திருமணத்துப்பின் நான் எல்ஜிபிடி பிரிவை என்பதை உணர்ந்தேன். எனக்கு 19வயதிலேயே ஆண் ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தனர். 

ஆனால், அவருடன் வாழப்பிடிக்காமல் 4 ஆண்டுகளில் பிரிந்தேன். இதைக் கேட்ட என் சகோதரி என்னை ஒதுக்கிவிட்டார், குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பை துண்டித்துவிட்டனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சுபிக்ஸாவைச் சந்தித்தேன். இருவருக்கும் மனது ஒத்துப்போனதால் திருமணம் செய்தோம்” எனத் தெரிவித்தார்

click me!