muruga mata: கர்நாடக மாடாதிபதிக்கு ஜாமீன் இல்லாத கைது வாரண்ட்! சொத்து வழக்கில் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

By Pothy RajFirst Published Sep 3, 2022, 11:03 AM IST
Highlights

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா ஷரணு, சிறுமிகளிடம் பாலியல்துன்புறுத்தலில் ஈடுபட்டதையடுத்து, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நிலத்தகராறு வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதி ஷிவமூர்த்தி முருகா ஷரணு, சிறுமிகளிடம் பாலியல்துன்புறுத்தலில் ஈடுபட்டதையடுத்து, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நிலத்தகராறு வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஹாவேரி மாவட்டத்தில் சித்ரதுர்காவில் பிரபலமான முருக மடம் உள்ளது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஷிவமூர்த்தி முருகா ஷரனரு இதை நடத்தி வருகிறார்.இந்த மடத்துக்குச் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருகிறது. 

kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

இந்தப் பள்ளியில் படித்துவரும் இரு மைனர் சிறுமிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மடாதிபதி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளாதாக புகார் எழுந்தது. 

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய சிறுமிகள் மைசூரில் உள்ள ஒரு தன்னார்வஅமைப்பை அணுகி தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறி புகார் அளித்தனர். 

இது தொடர்பாக மடத்தின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான பசவராஜன் சித்ரதுர்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகளை அழைத்து வந்து மைசூரூ போலீஸிடம் பசவராஜன் புகார் அளித்தார்.

ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்..!

இது தொடர்பாக மைசூரு நகர போலீஸார் மடாதிபதி மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், பாலியல் வன்முறை தொடர்பாக ஐபிசி பிரிவிலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் மடாதிபதி மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சிலமணிநேரத்தில் மடாபதி ஷிவமூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கெங்கெர் ஹோப்ளியில் உள்ள சுலிகேரெ கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மடாதிபதி ஷிவமூர்த்திக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

2024 தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் இந்து முஸ்லீம் பிரச்சனையை தூண்ட பாஜக சதி.. அலறும் கி.வீரமணி.

சுலிகேரா கிராமத்தில் 7ஏக்கர் நிலத்தை ரூ.48 லட்சத்துக்கு ஆனந்த குமார் என்பவருக்கு மாடதிபதி விற்பனை செய்துள்ளார். ஆனால், சந்தை மதிப்பில் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடியாகும். சந்தை மதிப்பை குறைத்துக்காட்டி நிலத்தை விற்பனை செய்துள்ளார் மடாதிபதி என்று குற்றம்சாட்டி பிஎஸ் பிரகாஷ் என்பவர் கிரிமினல் புகார் செய்திருந்தார்.

இந்த வழக்கு பெங்களூரு மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கில் மடாதிபதி ஷிவமூர்த்தி செப்டம்பர் 2ம் தேதி ஆஜராக நீதிபதி கெடு விதித்திருந்தார். ஆனால், சிறுமிகள் பாலியல் வழக்கில் தற்போது மாடாதிபதி சிறையில் உள்ளார்.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகத மடாதிபதி ஷிவமூர்த்திக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டை நீதிபதி பிறப்பித்து வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

click me!