congress president election: ராகுல் காந்தி போட்டியில்லை! காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

By Pothy RajFirst Published Sep 23, 2022, 4:56 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடமாட்டோம் என்று ராகுல் காந்தி என்னிடம் சொல்லிவிட்டார். அதனால் தலைவர்  பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடமாட்டோம் என்று ராகுல் காந்தி என்னிடம் சொல்லிவிட்டார். அதனால் தலைவர்  பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. வேட்புமனுத் தாக்ககல் நாளை முதல் தொடங்குகிறது. இதில் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. 

பிரதமர் பதவிக்காக பாஜகவின் முதுகில் குத்திவிட்டார் நிதிஷ் குமார்: அமித் ஷா குமுறல்

ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என 10க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றன. ஆனால், தலைவர் பதவிக்கு எம்.பி. சசி தரூர் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்து, சோனியா காந்தியிடம் பேசினார். இதற்கிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று அளித்த பேட்டியில் ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பது தெளிவானது. இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடமாட்டோம் என ராகுல் காந்தி என்னிடம் தெரிவித்துவிட்டார். ஆதலால் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட உள்ளேன். ராஜஸ்தான் முதல்வராக யார் வர வேண்டும் என்பது குறித்து சோனியா காந்தி, கட்சி தலைமை முடிவு எடுக்கும்.

சர்தார் சரோவர் அணை கட்டுமானப் பணியை நிறுத்திய ‘நகர்புற நக்சல்கள்’: பிரதமர் மோடி கடும் சாடல்

அனைவரின் விருப்பங்களையும் ஏற்று தலைவர் பதவிக்கு வாருங்கள் என பலமுறை ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவரோ காந்தி குடும்பத்திலிருந்து யாரும் அடுத்ததலைவராக வரமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி என்னிடம் கூறுகையில், என்னை காங்கிரஸ் தலைவராக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்.அவர்கள் விருப்பத்தை மதிக்கிறேன். ஆனால், நான் ஒரு காரணத்துக்காக எடுத்த முடிவின்படி காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும்.


ராஜஸ்தானுக்குச் சென்றபின் வேட்புமனுத் தாக்கலுக்கு தேதியை முடிவு செய்வேன். இது ஜனநாயகத்துக்கான கேள்வி, ஆதலால், அனைவருக்கும் புதிய தொடக்கமாக இருக்கட்டும்.
காங்கிரஸ் கட்சியின் மற்ற நண்பர்களும் போட்டியிடுகிறார்கள். இதில் சர்ச்சை ஏதும் இல்லை. ஆனால், தேர்தலுக்குப்பின், ஒன்றாகச சேர்ந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். 

கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு

மண்டலம், கிராமம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். கட்சிக்குள் ஒற்றுமை என்பது முக்கியம், கட்சியை அனைத்து மட்டத்திலும் பலப்படுத்த வேண்டும்.  வலிமையான எதிர்க்கட்சியாக எழவேண்டும்.நாட்டின் இப்போதுள்ள சூழலில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம். 

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்

click me!