காசி-தமிழ் சங்கமம் நடந்த பிரதமர் மோடிக்கு எண்ணம் எப்படி வந்தது என்று நான் வியக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டினார்.
காசி-தமிழ் சங்கமம் நடந்த பிரதமர் மோடிக்கு எண்ணம் எப்படி வந்தது என்று நான் வியக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டினார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்ககமும் நடத்தப்படுகிறது. கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும், முறைப்படி 19ம்தேதி(இன்று) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிவிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவுக்கு முதல்முறையாக தமிழர் நியமனம்
இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க உள்ளனர்.
இந்நிலையில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கா பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு வருகை வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, ஆளுநர் ஆனந்திபென் படேல் ,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.
அவர் பேசுகையில் “ காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான தொடர்பு இருக்கிறது. இந்த காசி நகரைப் பற்றி ஏராளமானோர் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் புரட்சிக்கவி பாரதியார் காசியில் வந்து தங்கி, கங்கை நதியில் நீராடி அதன் புகழைப் பாடியுள்ளார். கங்கைநதிபுரத்து கோதுமை பண்டம்,காவிரி வெற்றிலைக்கு மாறு செய்வோம் என்று பாரதியார் அப்போதே காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழுக்கு திருவள்ளூர் என்றால், காசிக்கு துளசிதாசர். திருவள்ளுவர் இரு அடிகளில் திருக்குறளைக் கொடுத்தார், மேலே 4 சீர்கள், கீழே 3 சீர்கள் என திருக்குறள் இருக்கும். அதேபோலத்தான் துளசிதாசரின் வரிகளும் இருக்கும்.
நம் பாரத பிரதமர் திரு. அவர்களின் உன்னத உணர்வுபூர்வமான முயற்சியான தொடக்க விழா
நிகழ்ச்சியில் டாக்டர் இசைஞானி இளையராஜா அவர்கள் உரையாற்றினார்கள் pic.twitter.com/bM5VDMWqs1
கர்நாடக இசையின் மூர்த்தியான முத்துச்சாமி தீட்சிதர் காசிக்கு வந்து இங்கு நகரில் ஏராளமான பாடல்களைப்பாடியுள்ளார். கங்கை நதிக்கரையில் நீராடி எழுந்தபோதுதான் கடவுள்சரஸ்வதி அவருக்கு வீணையை வழங்கினார். அந்த வீணை இன்னும் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
காசிக்கும், தமிழகத்துக்கும் பல்வேறு உன்னதமான தொடர்புகள் உள்ளன. இந்த காசி-தமிழ் சங்கத்தை நடத்தும் எண்ணம் நம்முடைய பிரதமர் மோடிக்கு எவ்வாறு வந்தது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தும் எண்ணம் தோன்றிய நமது பிரதமர் மோடி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும், புகழ் வளர வேண்டும்
இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்