Kashi Tamil Sangamam: காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவுக்கு முதல்முறையாக தமிழர் நியமனம்

By Pothy RajFirst Published Nov 19, 2022, 1:44 PM IST
Highlights

உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காசி மற்றும் தமிழகத்துக்கு இடையே தொன்மையாக நிலவும் உறவுகளை, கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கினாலும், இன்று(19ம்தேதி) பிரதமர் மோடியால் முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி வரும் 19ம் தேதி தொடங்கி வைக்கிறார்

 இந்த காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதம் டிசம்பர் 17ம் தேதிவரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கச் செல்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் பிறந்த கே.வெங்கட் ரமணா கணபதி என்பவர் காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் முதல்முறையாக உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராவது இதுதான் முதல்முறையாகும். 

கடந்த 1973ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பிறந்த கே. வெங்கட் ரமணா கணபதி, தன்னுடைய இளங்கலை பி.காம் பட்டப்படிப்பை வாரணாசியில் முடித்தார். வெங்கட் ரமணாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஏராளமான தமிழக் குடும்பங்கள் புலம்பெயர்ந்து காசி நகரில் வசித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான பண்டைய கால ஆன்மீக தொடர்பும்; காசி தமிழ் சங்கமும் ஒரு பார்வை!!

வெங்கட் ரமணாவின் தந்தை வி.கிருஷ்ணமூர்த்தி கணபதி, காசிநகரின் மிகவும் புகழ்பெற்ற வேத பண்டிதர். சமஸ்கிருதம் மற்றும் இந்திய நூல்களுக்கு அளித்த பங்களிப்புக்காக 2015ம் ஆண்டு கிருஷ்ணமூர்த்திக்கு குடியரசு தலைவர் விருதும் கிடைத்துள்ளது.  

காசி நகரில் ஏறக்குறைய 5 தலைமுறைகளாக வெங்கட் ரமணாவின் குடும்பத்தினர் வேதங்கள் படிப்பதிலும், பூஜைகள் செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். தென்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் காசிக்கு வரும்போது அவர்களுக்கு உண்மையான முறையில், பூஜைகளையும், சேவைகளையும் வெங்கட் ரமணா குடும்பத்தினர் செய்கிறார்கள்.

100 கோடி இளைஞர்கள் காது கேளாமல் போக ஆபத்து ! ஹெட்போன், இயர்பட் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் முதல்முறையாக காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக வெங்கட் ரமணா சேர்க்கப்பட்டுள்ளார். பிரதமர்மோடியின் வழிகாட்டலில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பெயரில் வெங்கட் ரமணா அறங்காவலர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

click me!