தமிழகத்தைப் போல பீகாரில் ஆளுநர் செய்த சம்பவம்! நடந்தது என்ன?

By SG BalanFirst Published Jan 10, 2023, 5:10 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் ரவி முறையாக வாசிக்கவில்லை என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இதேபோன்ற சம்பவம் பீகாரில் நடந்திருப்பது நினைவுகூரத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர். என். ரவி அரசு தயாரித்து அளித்த உரையில் சில பகுதிகளைத் தவிர்த்தும் சில பகுதிகளை தன் விருப்பப்படி மாற்றியும் வாசித்தார். ஆளுநர் உரை முடிந்த உடனேயே முதல்வர் ஸ்டாலின் இதனைக் கண்டித்து தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் ஆளுநர் ரவி அவையிலிருந்து பாதியில் வெளியேறினார்.

அரசு முன்பே தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் முன்பே பார்த்து ஒப்புதல் அளித்திருக்கிறார். இருந்தாலும் அதை அப்படியே வாசிக்காமல் ஆங்காங்கே சில பகுதிகளைத் தவிர்த்தும் திருத்தியும் வாசித்தது மரபை மீறிய செயல் என்று திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தெரிவிக்கின்றன.

ஆளுநரை தங்கள் புகழ்பாடும் வகையில் பேச வைக்க மாநில அரசு முயற்சி செய்கிறது என்றும் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரை அப்படியே வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். மேலும் ஆளுநர் தான் ஏற்புடையதாக கருதாத பகுதிகளைத் தவிர்த்துவிட்டு வாசிக்க அவருக்கு உரிமை உள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆளுநர் தாமாக பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நடைபெற்றதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பீகார் மாநிலத்தில் இதேபோன்ற சர்ச்சை இதற்கு முன் நடந்துள்ளது.

2004ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தார். ராமா ஜோய்ஸ் ஆளுநராக இருந்தார். அந்த ஆண்டு பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வர் லல்லு முன்னிலையில் உரையாற்றிய ஆளுநர் ராமா ஜோய்ஸ், பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகச் சாடினார்.

பீகார் மக்கள் பாதுகாப்பு இன்மையால் அச்சமுடன் இருப்பதாகவும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பீகாருக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள் என்றும் வெளிப்படையாக விமர்சித்தார்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்து மீண்டும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அவர் மாநில அரசின் முக்கியக் கடமை சட்டம் ஒழுங்கை உறுதிசெய்து மக்களைப் பாதுகாப்பாக உணர வைப்பதுதான் என்றும் அறிவுறுத்தினார்.

ஆளுநரை வைத்து திமுகவின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க முடியாது.. வானதி சீனிவாசன் பளீர்..!

பின்னர் பேசிய முதல்வர் லல்லு, மாநில அரசைப் பற்றிய ஆளுநரின் கடுமையான கருத்துகள் குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் முறையான புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ். பள்ளியைச் சேர்ந்தவர்களும் பாஜகவினரும் பேசுவதைத்தான் ஆளுநர் பேசியுள்ளார் என்றும் லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.

குடியரசு தின விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பு, ஜனவரி 24ஆம் தேதி சமூக சேவகர்கள் சரிதா, மகேஷ் ஆகியோர் பதேபூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதே நாளில் பட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவி தவான். எஸ். கே. சிங் இருவரும், “பீகார் மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்று சான்று அளிக்க இந்த நீதிமன்றம் தயாராக இருக்கிறது” என்று குறிப்பிட்டனர். ஏற்கெனவே துபே கொலைக்குப் பின், 2003 டிசம்பர் 11ஆம் தேதி, பீகார் மாநிலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் உயர் நீதிமன்றமே கூறியிருந்தது.

இச்சூழலில் குடியரசு தின விழாவில் ஆளுநர் பேசியது பற்றி கருத்து தெரிவித்த் அப்போதைய பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, “பீகாரில் ராட்சசர்களின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது” என்று கூறியதுடன், ஆளுநர் ராமா ஜோய்ஸ் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் என்றும் பாராட்டினார்.

தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர்.! இனியும் பதவியில் நீடிக்க கூடாது.! முற்றுகை போராட்டத்திற்கு தேதி குறித்த திருமா

2004 பீகார் சம்பவத்தில் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் வரை பீகார் அரசு ஆளுநர் உரையைத் தயாரித்து அனுப்பவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இப்போது தமிழகத்தில் எழுந்துள்ள சரச்சையில் அப்படி நடக்கவில்லை. தமிழக அரசு முறைப்படி முன்பே ஆளுநர் உரையைத் தயாரித்து அனுப்பியுள்ளது. ஆனால், ஆளுநர் தான் ஒப்புக்கொண்டபடி உரையை வாசிக்கவில்லை என்பதே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆளுநர் தனக்கு விருப்பமில்லாதவற்றைப் பேசவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் உரையில் சில பகுதிகளைத் தவிர்த்து வாசிக்க அவருக்குக் கருத்துரிமை இருக்கிறது என்ற ஆளுநருக்கு ஆதரவாவும் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?

click me!