Snake in Midday Meal: பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு:மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதி

Published : Jan 10, 2023, 03:36 PM ISTUpdated : Jan 10, 2023, 03:39 PM IST
Snake in Midday Meal: பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு:மாணவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது கண்டுபடிக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட ஏராளமான மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது கண்டுபடிக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட ஏராளமான மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிர்பும் மாவட்டத்தில் உள்ள மயூரீஸ்வர் நகரில் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது. மாணவர்களும் மதிய உணவை சாப்பிட்டுச் சென்றனர்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வழங்கும் பாத்திரத்தில் பாம்பு இருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

27 நதிகள்!51 நாட்கள்! வாரணாசி முதல் திப்ருகார்க்வரை! பிரதமர் மோடி தொடங்கும் சொகுசு கப்பல் பற்றி தெரியுமா?

ஆனால், மதிய உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் பலர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தும், மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ராம்புர்ஹத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, உணவு வெளியேற்றப்பட்டது. அதன்பின் மாணவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். வட்டார மேம்பாட்டு அதிகாரி திபாஜன் ஜனா கூறுகையில் “ மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் பலர் திடீரென மயங்கி விழுந்ததாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 10ம் தேதி தொடக்கப்பள்ளி ஆய்வாளரை அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளில் அனைவரும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் யாருக்கும் ஆபத்து இல்லை”எனத் தெரிவித்தார்

கடந்த 5 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளில் 79% உயர் சாதியினர்,2%எஸ்சி,சிறுபான்மையினர்

போலீஸார் கூறுகையில் “ பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்தது, மாணவர்கள் மயக்கமடைந்தனர் என்ற தகவல் கிராமத்தில் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் இருசக்கரவாகனத்தை அடித்துசேதப்படுத்தினர்.  அதன்பின் போலீஸார் அங்கு சென்று தலைமை ஆசிரியரை மீட்டனர்” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?