Bengaluru Metro: பெங்களூரு மெட்ரோ தூண் சரிந்து தாய், குழந்தை பரிதாபச் சாவு

Published : Jan 10, 2023, 03:01 PM IST
Bengaluru Metro: பெங்களூரு மெட்ரோ தூண் சரிந்து தாய், குழந்தை பரிதாபச் சாவு

சுருக்கம்

பெங்களூரில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் கட்டுமானப் பணியின்போது தூண் சரிந்து விழுந்ததில் ஒரு தாயும் குழந்தையும் பலியாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். லேஅவுட் வரை செல்லும் வழித்தடத்தில் மெட்ரோ மேம்பாலத்துக்குத் தூண்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இன்று, செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் நாகவரா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மெட்ரோ பாலத்தின் தூண் ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது. இதில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கணவன் - மனைவி, மற்றும் அவர்களது 2 வயது மகன் என மூவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தாயும் 2 வயது குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

54 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் அவசரமாகப் பறந்த கோ ஃபர்ஸ்டு விமானம்

இதனிடையே, இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது. தூண் சரிந்து விழுந்த இடிபாடுகளை அகற்றி சாலையைச் சீரமைக்கும் வேலை நடந்துவருகிறது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!