Go First Flight: 54 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் அவசரமாகப் பறந்த கோ ஃபர்ஸ்டு விமானம்

By SG BalanFirst Published Jan 10, 2023, 1:27 PM IST
Highlights

பெங்களூரிலிருந்து புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் ஒன்று 54 நான்கு பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றதால் விமான நிலையத்தில் சிறிதுநேரம் குழப்பம் ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 (Go First G8 116) விமானம் திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. ஆனால், இந்த விமானத்தில் பயணிக்கத் தயாராகக் காத்திருந்த 54 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் புறப்பட்டுவிட்டது.

அவர்களது லக்கேஜ்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்டன. 54 பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்தில் தவித்தனர். இதுகுறித்து பயணிகள் ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு விமான நிலையத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்த நபர், “பெங்களூரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் கோ ஃபர்ஸ்ட் ஜி8 116 விமானம் 54 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு, அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டது. விட்டுச் செல்லப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் அவதிப்படுகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

PM Modi medical expenses: பிரதமர் மோடி மருத்துவத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லையாம்!

Go first G8 116 flight Blore-delhi, 54 passengers were left in the bus post final on-board, the flight took off with luggages and left 54 passengers at the airport, serious security branch. passenger's are struggling. pic.twitter.com/MhwG7vI7UZ

— Neeraj Bhat (@neerajbhat001)

இதனிடையே, எதிர்பாராத இந்தக் குழப்பத்தால் அதிர்ச்சி அடைந்த விமான நிறுனவம் நிகழ்ந்த தவறுக்கு மன்னிப்பு கோரியது. மேலும், உடனடியாக பாதிக்கப்பட்ட பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்ப ஏற்பாடு செய்தது. அதன்படி, காலை 10 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் அவர்கள் அனைவரும் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

54 பயணிகளின் லக்கேஜ்கள் விட்டுச்சென்ற விமானத்தில் ஏற்றப்பட்டதால், அவை முதலில் டெல்லியை அடைந்துவிட்டன. நான்கு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்ட மற்றொரு விமானத்தில் சென்ற இந்தப் பயணிகள் மதியம் 2 மணி அளவில் டெல்லியை அடைந்து தங்கள் லக்கேஜ்களைப் பெற்றுக்கொண்டனர்.

click me!