Supreme Court: கடந்த 5 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகளில் 79% உயர் சாதியினர்,2%எஸ்சி,சிறுபான்மையினர்

By Pothy RajFirst Published Jan 10, 2023, 12:47 PM IST
Highlights

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 79 சதவீதம் பேர் உயர்சாதியினர், சிறுபான்மையினர் 2 சதவீதம், பட்டியலினத்தவர் 2 சதவீதம் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 79 சதவீதம் பேர் உயர்சாதியினர், சிறுபான்மையினர் 2 சதவீதம், பட்டியலினத்தவர் 2 சதவீதம் எனத் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் சமூக பிரதிநிதித்துவம் இன்றி, வகுப்பு சமத்துவம் இன்றி நீதிபதிகள் நியமனம் நடக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ஓர் செய்தி வெளியிட்டுள்ளது. 

7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் மாறும்: ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை

இந்த செய்தி என்பது, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின் புள்ளிவிவரங்களைத் தாங்கி, அதன் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டு அமைந்துள்ளது.  

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 15 சதவீதம் பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற குழுவிடம் சட்டத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த 30 ஆண்டுகளாக நீதித்துறையில் நீதிபதிகள் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நிலையில் அது முழுமையானதாக, சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை.

நீங்கள் ஸ்வெட்டர் அணியும் சூழல்வராதவரை எனக்கு ட்-ஷர்ட் தான்: மனம் திறந்த ராகுல் காந்தி

நீதித்துறையில் நீதிபதிகளாக பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், ஓபிசி, சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரில் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பரிந்துரைப்பது அவசியம்.

தற்போதைய அமைப்பில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் நபர்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளாக அரசால் நியமிக்க முடியும் என்றும் சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018 முதல் 2022, டிசம்பர் 19ம் தேதிவரை நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் இதுவரை 537 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.3 சதவீதம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், 2.8 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஓபிசி வகுப்பில் 11 சதவீதம், 2.6 சதவீதம் பேர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.79 சதவீதம் பேர் உயர் சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜோஷிமத் நிலச்சரிவு! ஜனநாயக அரசு எதற்காக இருக்கிறது! அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்ற மறுப்பு

நாட்டில் ஓபிசி வகுப்பினர் 35 சதவீதம் இருக்கும் போது அவர்களில் இருந்து வெறும் 11சதவீதம் பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது

கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பலமுறை கொலிஜியம் அனுப்பிய நபர்கள் பெயரை நீதிபதிகளாக நியமிக்க அரசு மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால் அந்த பெயர்களை கொலிஜியம் திருத்தாமல் மீண்டும் அனுப்பும்போது அதை ஏற்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்படுகிறது.

click me!