Himachal Pradesh Election Result: இமாச்சல் தேர்தலில் உள்ளடி வேலை பார்த்த 30 பேர்.. அதிரடியாக தூக்கிய காங்கிரஸ்

By Raghupati RFirst Published Dec 8, 2022, 9:43 AM IST
Highlights

இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

68 இடங்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு கடந்த மாதம் 12ஆம் தேதி அன்று தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.  இதற்காக மாச்சலப் பிரதேசத்தில் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

தேர்தல் முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் வாக்குகள் அனைத்து வாக்கு மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பாஜக 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தனர். பாஜகவின் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார்.  இந்த 3 கட்சிகளும் 68 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

இதையும் படிங்க.. Himachal Pradesh Election Result: இமாச்சலில் காங்கிரஸ், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் !!

இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பகுஜன் சமாஜ் 53 இடங்களிலும் ராஷ்ட்ரிய தேவ்பூமி கட்சி 29 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. களத்தில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்தது. பிறகு காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் அடைந்தது.

தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் பாஜக 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 30 தலைவர்களை காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகள் வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிம்லா புறநகர் மாவட்ட குழுவின் துணை தலைவர்கள், முன்னாள் துணை தலைவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் உள்பட 30 முக்கிய தலைவர்கள் அடங்குவார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே உட்கட்சியில் களையெடுப்பு எடுத்த சம்பவம் காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க.. Himachal Pradesh Election Results: இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைகிறதா.? பாஜக Vs காங்கிரஸ் பிளான்.!!

click me!