குஜராத் சட்டசபைத் தேர்தலில் 182 தொகுதிகள் இருந்தபோதிலும் குறிப்பிட்ட சில தொகுதிகள் நாடுமுழுவதும் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றன. அதில் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு ஆகிய தொகுதிகள்தான்.
குஜராத் சட்டசபைத் தேர்தலில் 182 தொகுதிகள் இருந்தபோதிலும் குறிப்பிட்ட சில தொகுதிகள் நாடுமுழுவதும் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றன. அதில் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு ஆகிய தொகுதிகள்தான்.
இந்த 3 தொகுதிகளிலும் தேசிய அளவில் பேசப்பட்ட 3 இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளதுதான் காரணம். ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகிய 3 இளைஞர்கள் மீதுதான் கவனம் குவிந்துள்ளது.
குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை:பாஜக அசுர முன்னிலை:ஹர்திக் படேல்,அல்பேஷ் பின்னடைவு
இதில் அல்பேஷ் தாக்கூர் காந்திநகர் தெற்கு தொகுதியிலும், ஹர்திக் படேல் விராம்கம் தொகுதியிலும், ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் சார்பில் வட்கம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
இதில் பட்டிதார் இனத்தவரின் தலைவரான ஹர்திக் படேல், அவருடைய சக தோழரும், தாக்கூர்பிரிவைச் சேர்ந்த அல்பேஷ் தாக்கூர் ஆகிய இருவரும் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை கடுமையாக எதிர்த்தனர். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் செய்த பிரச்சாரத்தைவிட இருவரும் செய்த பிரச்சாரம்தான் அதிகம்.
ஆனால், இந்தத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் இருவரும் பாஜகவில் சேர்ந்தனர். பாஜகவின் சார்பில் காந்திநகர் தெற்குதொகுதியில் அல்பேஷ் தாக்கூரும், விராம்கம்தொகுதியில் ஹர்திக்படேலும் போட்டியிட்டனர்.
ஆனால், 2017ம் ஆண்டுதேர்தலில் சுயேட்சையாக களத்தில்நின்ற ஜிக்னேஷ் மேவானி, பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வட்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விராம்கம் தொகுதியில் 60ஆயிரத்துக்கும் அதிகமான பட்டிதார் மக்கள் இருப்பதால், அவர்களை நம்பி ஹர்திக் படேலை பாஜக களத்தில் இறக்கியுள்ளது.
குஜராத்தில் பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் முன்னிலை!!
காந்திநகர் தெற்கு தொகுதியியில் போட்டியிடும் அல்பேஷ் தாக்கூர் கடந்த முறை ராதான்பூர் தொகுதியில் போட்யிட்டார்.காந்திநகர் தெற்கு பாஜகவுக்கு ஆதரவான தொகுதி என்பதால், அலேப்ஷ் தாக்கூருக்கு பிரச்சினை இருக்காது.
ஆனால், ஹர்திக் படேல் விராம்கம் தொகுதியில் இன்று காலை நிலவரப்படி பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் லக்கா பார்வாட் முன்னிலை பெற்றுள்ளார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.