குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். கடந்த 2018ல் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
பாஜக 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்று இருந்தனர். பாஜகவின் ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். 68 தொகுதிகளுக்கும் நவம்பர் 12ல் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 12 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படிங்க.. Himachal Pradesh Election Result: இமாச்சலில் காங்கிரஸ், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் !!
மொத்தம் 59 இடங்களில் உள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியில் உள்ளன. இதில் நேரடியான போட்டி என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இமாச்சல பிரதேச முடிவுகள் வெளியாகி வருகிறது. இமாச்சல பிரதேச தேர்தல் கருத்துக்கணிப்பில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிய வந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இமாசலப்பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. Himachal Pradesh Election Results: இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைகிறதா.? பாஜக Vs காங்கிரஸ் பிளான்.!!