Gujarat Election Result 2022: குஜராத்தில் பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் முன்னிலை!!

By Pothy RajFirst Published Dec 8, 2022, 8:31 AM IST
Highlights

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. குஜராத்தில் பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பாஜக 6 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. முதல் கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு !!

இந்த தேர்தலில் 64.33 சதவீதம் வாக்குகள் பதிவாகின, கடந்த 2017ம் ஆண்டுதேர்தலில் பதிவான வாக்குகளைவிட 4 சதவீதம் குறைவாக பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

குஜராத்தில் வழக்கமாக பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும். இந்த முறை ஆம் ஆத்மி கட்சி களத்தில் இறங்கி இரு கட்சிகளுக்கும் கடும் சவாலாக இருந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 179 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன

இந்நிலையில் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கைக்காக பலத்தபாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. 

இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 182 தேர்தல் அதிகாரிகள், 494 தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணும்  பணியை கண்காணிக்கிறார்கள். 78 துணைத் தேர்தல் அதிகாரிகள், 71 கூடுதல் தேர்தல் பார்வையாளர்களும் வாக்கு எந்திரங்கள் கண்காணிப்பிலும், வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கவும் அமைக்கப்பட்டுள்ளனர்.

Gujarat Election Result 2022: 60 ஆண்டுகளில் குஜராத் சட்டசபைக்கு இதுவரை 111 பெண் MLA-க்கள் மட்டுமே தேர்வு

காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்திலேயே பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆனால், வாக்குஎந்திரங்கள் சீல் உடைக்கப்பட்டு அடுத்தடுத்து எண்ணும்போது பாஜக தொடர்ந்து முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது.

பாஜக இதுவரை 77  தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.


 

click me!