உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோயில் உள்ள மணப்பெண்கள் தங்கள் கணவர்களின் கிராமங்களில் ஈக்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களின் தாய்வழி வீடுகளுக்கு செல்லும் சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பதையன் பூர்வா கிராமத்தைச் சேர்ந்த ஆறு மணப்பெண்கள் ஓராண்டில் தங்கள் தாய்வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களது கணவர்கள் அவர்களை திரும்பி வரச் சொல்லி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பலனில்லை. மணப்பெண்கள் தங்கள் கணவர்களை தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டும் அல்லது எங்களை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.
எதற்காக மணப்பெண்கள் கணவர்கள் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் சந்தேகமாக இருக்கிறதா ? வாருங்கள் பார்க்கலாம். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பதையன் பூர்வா, குய்யான், பட்டி, தஹீ, சேலம்பூர், ஃபதேபூர், ஜால் பூர்வா, நயா காவ்ன், தியோரியா மற்றும் எக்காரா ஆகிய கிராமங்கள் ஈக்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக லைவ் ஹிந்துஸ்தான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!
கிராமங்களில் தனியாக இருக்கும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் கூறுகையில், தனது சகோதரியின் மாமியார் வரும்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த இனிப்புகளை ஈக்கள் தாக்கின. இதனால் திருமணம் நின்றுவிட்டது. அதேபோல அஜய் வர்மா மற்றும் ராம்கிலவன் மகள்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொல்லையால் நின்றது’ என்று கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு இப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமங்கள் ஈக்கள் கூட்டமாக மாறிவிட்டன என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் ஈக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்ததால் நிலைமை மோசமாகியது. பதையன் பூர்வா குடியிருப்பாளர்கள் கிராமத்திற்கு வெளியே இந்த பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க..மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை மதியத்திற்குள் முடித்து விடுகின்றனர். இது குறித்து கிராம பிரதான் விகாஸ் குமார் கூறியதாவது, ஈக்களின் தொல்லை பெரிய பிரச்சனையாகி, உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. பலருக்கு திருமணம் நடப்பதில் பிரச்னையாக இருக்கிறது. இந்த ஆண்டு திருமணம் நடக்கவில்லை.
அரிஹோரி சிஎச்சி கண்காணிப்பாளர் மனோஜ் குமார் இதுபற்றி கூறும்போது, பல முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிராமங்களில் ஈக்கள் தொடர்பான நோய்களின் போக்கு காணப்படவில்லை’ என்று விளக்கம் அளித்தார். ஈக்களின் தொல்லை அந்த கிராமங்களுக்கு பெரும் தொல்லையாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !