இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!

By Raghupati R  |  First Published Dec 7, 2022, 3:37 PM IST

சீனாவின் நவீன உளவு கப்பல் மீண்டும் இந்திய கடலில் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


‘யுவான் வாங் 5’ என்ற சீன புலனாய்வுக் கப்பலானது இந்த மாத தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது. இப்பகுதியில் இந்தியா ஏவுகணை சோதனை நடத்துவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக இது நடைபெற்றது.

வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியில் ஏவுகணைச் சோதனை நடத்தப்படுவதைக் குறிக்கும் வகையில், பறக்கக்கூடாத பகுதி ஒன்றை இந்தியா அறிவித்துள்ளது. பரிசோதிக்கப்படக்கூடிய ஏவுகணை அதிகபட்சமாக இந்தியப் பெருங்கடலில் 5,400 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியா தனது K-4 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) அல்லது நிலம் சார்ந்த அக்னி-V பாலிஸ்டிக் ஏவுகணையை சோதிக்க தயாராகி வருவதாக நம்பப்படுகிறது. இதற்கு பிந்தையது 5,000 கிமீ வரம்பைக் கொண்டிருந்தாலும், முந்தையது 3,500 - 4,000 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது.

இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!

மேம்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்ட சீன கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சமிக்ஞை நுண்ணறிவை சேகரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆண்டு ஆகஸ்டில் ஹம்பாந்தோட்டையில் வந்து நிறுத்தப்பட்ட யுவான் வாங் 5, இந்தியாவிலும், இலங்கையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் யுவான் வாங் 6 என்ற மற்றொரு சீன உளவுக் கப்பலுடன் இப்பகுதியில் காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்தியா நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விமானம் பறக்க தடை மண்டலத்தை அறிவித்தது. இருப்பினும், சோதனைக்கு சில நாட்களுக்கு முன்பு சீன உளவுத்துறை கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் நுழைந்த சில நாட்களில் அது ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யுவான் வாங் 5 இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள லோம்போக் ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது என்று கூறப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலை பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கும் மூன்று முக்கிய சோக்பாயிண்ட்களில் இதுவும் ஒன்று ஆகும். கப்பல்களின் இயக்கம் குறித்த தகவல்களை வழங்கும் இணையதளமான MarineTraffic இன் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலில் சீன உளவுக் கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..மானின் ரத்தத்தில் குளியல்.! புற்றுநோய்க்கு மருந்தா.? சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அதிபர் புடின் !!

இந்தியாவின் ஒரே செயல்பாட்டு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான (SSBN), INS அரிஹந்த், தற்போது K-12 SLBMகளைக் கொண்டு செல்கிறது. வங்காள விரிகுடாவில் உள்ள SSBN இலிருந்து வெறும் 750 கிமீ தூரம் வரை சுடும். இது இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தின் கடல் காலின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும். இது நிலம், வான் மற்றும் கடலில் இருந்து அணுசக்தி தாக்குதலை நடத்தும் திறன் கொண்டதாகும்.

இந்தியாவின் ஒவ்வொரு ராணுவ நிலைகளையும் சீனா உளவு பார்க்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் இந்தியா அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடத்துவதால் அந்த உளவு கப்பலை சீனா ராணுவம் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !

click me!