Delhi MCD Election Result 2022: பாஜகவின் ராஜ்ஜியம் முடிந்தது: டெல்லியை முழுமையாகக் கைப்பற்றியது ஆம்ஆத்மி

Published : Dec 07, 2022, 02:40 PM IST
Delhi MCD Election Result 2022: பாஜகவின் ராஜ்ஜியம் முடிந்தது: டெல்லியை முழுமையாகக் கைப்பற்றியது ஆம்ஆத்மி

சுருக்கம்

டெல்லி உள்ளாட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த பாஜகவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது, ஆம்ஆத்மி கட்சி டெல்லி உள்ளாட்சியைக் கைப்பற்றுகிறது.

டெல்லி உள்ளாட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வந்த பாஜகவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது, ஆம்ஆத்மி கட்சி டெல்லி உள்ளாட்சியைக் கைப்பற்றுகிறது.

டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 250 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிகமாக 126 இடங்களில் வென்று உள்ளாட்சியைக் கைப்பற்றியுள்ளது.
15 ஆண்டுகளாக டெல்லி உள்ளாட்சியில் இருந்துகொண்டு ஆம் ஆத்மிக்கு குடைச்சல் கொடுத்த பாஜக 97 இடங்களில் வென்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக மதிப்புகளை உயர்த்துவார் குடியரசு துணைத் தலைவர் தன்கர்: பிரதமர் மோடி

பிற்பகல் 2 மணிநேர நிலவரப்படி 130 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது, இன்னும் 4 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவைாயன 126 இடங்களைவிட ஆம் ஆத்மி அதிகமாக பெற்றுள்ளது.

டெல்லி உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக பெரிய தோல்வியைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடும் போட்டியளித்து 99 இடங்களைப் பிடித்துள்ளது, இன்னும் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தேய்ந்து போய் 7 இடங்களைப் பிடித்துள்ளது.

டெல்லி தேர்தல் முடிவு: பாஜகவின் ராஜ்ஜியம் முடிகிறது!ஆம்ஆத்மி தொடர் முன்னிலை

வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூரில் சுயேட்சை வேட்பாளர் ஷகீலா பேகம் உள்ளிட்ட 3 சுயேட்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 

ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில் “ 10 ஆண்டுகளே ஆன ஆம் ஆத்மி கட்சி தேசத்தின் மிகப்பெரிய கட்சியை மீண்டும் தோற்கடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மூலம் ஆம் ஆத்மி கட்சி நேர்மையானது என்று மக்கள் நம்புகிறார்கள். பாஜக தங்களுடைய 17 மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்களை களமிறக்கி பிரச்சாரம் செய்தது” எனத் தெரிவித்தார்

டெல்லி பாஜக மாநிலத் தலைவர் ஆஷிஸ் குப்தா கூறுகையில் “ 15 ஆண்டுகளாக எங்களுக்கு எதிராக அதிருப்தியான மனநிலை இருந்தாலும், எங்கள் செயல்பாடு சிறப்பானது. மக்களுக்காக பணியாற்றினோம், மக்கள் பாஜகமீது வெறுப்போ, கோபமோ அடையவில்லை” எனத் தெரிவித்தார்

2017ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 181 இடங்களில் வென்றது, ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 30இடங்களிலும் வென்றன. 

ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்தக் கட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரிய ஒலிபெருக்கிகளில் பாடல்களை ஒலித்தும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல்முறையாக டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!