ஜனநாயகத்தின் மதிப்புகளை, விழுமியங்களை குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நிலைநாட்டுவார் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் மதிப்புகளை, விழுமியங்களை குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நிலைநாட்டுவார் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள ஜெகதீப் தன்கர் மாநிலங்களவைக்கு முதல்முறையாக தலைமை ஏற்று நடத்த உள்ளார்.
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், அவைக்கு வந்ததும் முறைப்படி அவைக்கு தலைமை ஏற்றார். அவருக்கு அவையில் உள்ள அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
டெல்லி தேர்தல் முடிவு: ஆம்ஆத்மி 36 வார்டில் வெற்றி!பாஜகவுக்கு பின்னடைவு
மாநிலங்களவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த அவைக்கு தலைவராக வந்துள்ள குடியரசுத்துணைத் தலைவருக்கு அவையின் சார்பிலும், தேசத்தின் மக்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரவேற்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்கள், தடைகளைச் சந்தித்து இந்த இடத்துக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். ஜனநாயகத்தின் உயரிய மதிப்புகள், விழுமியங்களைக் காப்பீர்கள். உங்களின் இந்த உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்வேகத்தை அளிக்கும்.
நம்முடைய குடியரசுத் துணைத் தலைவர் விவசாயியின் மகன். சைனிக் பள்ளியில் படித்தவர், ராணுவத்தினர், விவசாயிகள் மீது அதிக அக்கறை கொண்டவர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடும் தருணத்திலும், ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற நேரத்திலும் இந்த அவை நடக்கிறது.
டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: பாஜக முன்னிலை! ஆம் ஆத்மி பின்னடைவு
நம்முடைய மதிப்புக்குரிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பழங்குடிஇனத்தைச் சேர்ந்தவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் இருந்தவர், நம்முடைய குடியரசுத் துணைத் தலைவர் விவசாயியின் மகன். நம்முடைய குடியரசுதுணைத் தலைவருக்கு சட்ட விஷயங்களில் அதிகமான அறிவு உண்டு.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்